“தீராத நோய்களை தீர்த்து வைக்கும் வடாரண்யேஸ்வரர்..” திருமண தடை நீக்கும் பக்தவச்சல பெருமாள்..!!
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு எனும் ஊரில் குடிகொண்டுள்ள வடாரண்யேஸ்வரர் தீராத நோய்களை தீர்த்து வைக்கும் தெய்வமாக விளங்குகிறார்.. புகழ்பெற்ற சிவன் கோவில்களில் இத்திருதலமும் ஒன்று. இத்தகைய சிறப்பு மிக்க வடாரண்யேஸ்வரர் எந்த நாளில் வழிபட வேண்டும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்..
தொண்டை நாட்டுத் தலங்களில் 15வது திருத்தலமாக விளங்கும் வடாரண்யேஸ்வரர் கோவில், சங்க காலத்திற்கு முன் கட்டப்பட்ட ஒரு திருத்தலமாகும்.., இக்கோவிலில் திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூன்று தமிழ் சைவ நாயன்மார்களால் புகழ்பெற்ற திருத்தலம் இதுவே என சொல்லாம்.. முன்னோரு காலத்தில் பல்லவ, சோழ, விஜயநகர மன்னர்களால் திருப்பணிகள் நடத்தபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திருத்தலத்தில் சிவன் மட்டுமின்றி வள்ளுவர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, விஷ்ணு, சண்டிகேஸ்வரி தெய்வங்களுக்கும் தனி சிறப்பு கோவில்கள் உள்ளது.. இக்கோவிலின் வாசல் வளாகத்தில் பல சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் இத்திருத்தலம் உருவான கதைகள் பற்றி குறிபிடப்பட்டுள்ளது..
இத்திருத்தலத்திற்கு பெரும்பாலும் உடல்நல பிரச்சனைகள், மனநல பாதிப்புகள் போன்ற நோய்களை தீர்க்கும் சிறப்பு தலமாகவும் இத்திருத்தலம் விளங்குகிறது.
தெய்வத்தை வழிபடுவதால் கிடைக்கும் பலன் :
இக்கோவிலின் நடை காலை 6.00 மணிக்கு திறக்கப்பட்டு முதல் இரவு 7.45 மணிக்கு சாற்றப்படுகிறது.. 108 திவ்யா தேசங்களில் ஒன்றான இத்திருத்தலமானது அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோவிலின் இறைவன் திருநாமம் பக்தவத்சலப்பெருமாள் இறைவின் திருப்பெயர் என்னைப்பெற்ற தாயார் என போற்றபடுகிறார்..
உலகின் பணக்கார கடவுள்களில் ஒருவரான குபேரன் தன்னுடைய நிதியை இழந்து வாடியபோது “என்னைப்பெற்ற தாயாரை” வணங்கி விட்டு சென்ற பின் அவருக்கு பண வரவு அதிகரித்தாக சொல்லபடுகிறது.. இத்திருத்தலத்தில் என்னைப்பெற்ற தாயார் சகல சவுபாக்கியங்களையும் தரும் வைபவலட்சுமியாக உள்ளார். இவரை வணங்கினால் பணவரவு அதிகரிக்கும் என்பது ஐதீக உண்மை..
ஆதிசேஷவனுக்கு என்று இங்கு தனி சன்னதி உள்ளது.. இவரை புதன் கிழமை தோரும் அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி., நைவைத்தியமாக பால் பாயாசம் படைத்து வழிபட்டால் ராகு-கேது மற்றும் சர்ப்ப தோஷங்கள் விலகி மாங்கல்ய பலன் கிடைக்கும் என்பதும் ஐதீக உண்மை.
திருமங்கை ஆழ்வார் திருத்தலமானது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இருக்கிறது.. இந்த திருத்தலத்தில் எந்த பாசுரமும் பாடவில்லை. இதைக்கண்ட தாயார் பெருமாளிடம், உடனே சென்று ஒரு பாசுரம் பெற்று வருமாறு ஆழ்வாருக்கு கட்டளையிட்டுள்ளார்..
அதற்குள் ஆழ்வார் மாமல்லபுரம் அருகே உள்ள திருக்கடன் மல்லை கோயிலுக்கு போய் விட்டார். அங்கு சென்ற பெருமாள் ஆழ்வாரிடம் பாசுரம் ஒன்றைக் கேட்டார். “நீண்ட வத்தக் கருமுகிலை எம்மான் தன்னை நின்றவூர் நித்திலத் தொத்தூர் சோலை காண்டவத்தைக் கனலெரிவாய் பெய்வித்தானைக் கண்டது நான் கடல் மலலை தலசயனத்தே’ என்று பாடினார்
இப்பாடலின் பொருள் என்னவென்றால் “எம்பெருமான் என் பாடல் கேட்டு வந்து நின்றதை நான் கண்டது கடன் மல்லையாகிய மாமல்லபுர திருத்தலத்தில்’ என்பது தான். இப்படி, இந்த உலகையே காக்கும் பெருமாளே, பக்தனின் பெருமையை உலகுக்கு உணர்த்த இவ்வாறு பாடல் வாங்கிச்சென்றார்.
பாடல் பெற்று வந்த பெருமாளைப்பார்த்த தாயார்,என்ன இது! எல்லா தலங்களுக்கும் பத்து பாடல்களுக்கு மேலிருக்க இத்தலத்திற்கு மட்டும் ஒரு பாட்டு மட்டும் தானா?” என கேட்க. இதைக்கேட்ட பெருமாள் மீண்டும் ஆழ்வாரிடம் பாடல் பெற சென்றார்.
அதற்குள் ஆழ்வார் திருவாரூர் அருகே உள்ள திருக்கண்ணமங்கை வந்துவிட்டார். அங்கே கண்ணமங்கை பெருமாளை மங்களாசாசனம் செய்யும் போது திருநின்றவூர் பெருமாள் வந்து நிற்பதை தன் ஓரக்கண்ணால் கண்ட திருமங்கை ஆழ்வார் அவரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்தார் என்பது வரலாறு.
இந்த அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருத்தலமானது திருநின்றவூரில் அமைந்துள்ளது., இங்கு காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் சாமி தரிசனம் செய்ய முடியும்.. பெரும்பாலும் இத்திருதலத்திற்கு திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் சென்று வழிபட்டால் திருமண தடைகள் நீங்கி விரைவில் மாங்கல்ய வரன் கிடைக்கும் என்பது ஐதீகம்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..