தினமும் கருப்பு உலர் திராட்சை சாப்பிட்டால் இவ்வளவு பயனா..!!
ஆரோக்கியமான வாழ்க்கை என்றால் அனைவருக்கும் பிடிக்கும், ஆனால் சில தவறான உணவு முறைகளால் கேடும் விளைவிக்கிறது. இதை சரிசெய்ய சில உணவுகளை நாம் சேர்த்துக் கொண்டாலே போதும்.
* தினமும் நான்கு கருப்பு திராட்சை எடுத்துக்கொண்டால்.., ரத்த சோகை, செரிமான கோளாறு, ரத்தத்தில் நச்சு கொலஸ்ட்ரால் போன்ற பல்வேறு பிரச்னைகளை சரி செய்கிறது.
* உடலுக்கு தேவையான நார்ச்சத்து கொடுக்கிறது, இதனால் மலசிக்கல் போன்ற பிரச்சனை ஏற்படுவதை தடுக்கிறது.
* எலும்புக்கு தேவையான வலுவை கொடுக்கிறது, எலும்பு தேய்மானம் அடையாமல், துளைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
* கொலஸ்ட்ராலை குறைத்து மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. இதை தொடர்ந்து சாப்பிடுவதால் இரத்தத்தின் அளவை சீராக வைக்கிறது. இதனால் இதயம் சம்மந்தமான நோய்கள் ஏற்படாமல் காக்கிறது.
* கருப்பு திராட்சை தினமும் சாப்பிடுவதால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் திறன் கொண்டுள்ளது. புற்றுநோய் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் ஆக்சிஜனேற்ற சேதங்கள், மற்றும் ஃப்ரீ ரேடிகளில் இருந்து பாதுகாக்கிறது.
* வாய் புண், தொண்டை புண், பிரச்சனை உள்ளவர்கள் திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டால் இவை சரியாகி விடும்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி