ஆரோக்கியமான வாழ்விற்கு அசத்தலான 5 டிப்ஸ்..!!
நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள, நாம் உண்ணும் உணவில் சிலவற்றை சேர்த்துக் கொண்டாலே போதும்.. ஆரோக்கியமாக வாழ்வதற்கான சில முக்கிய உணவுகள் பற்றி, இனி தினமும் உங்களுக்காக சில குறிப்புகள்..
தேன் : தினமும் தேன் சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.

உடலில் உள்ள ரத்தத்தை தூய்மைப் படுத்தி, இதயத்தை சீராக இயங்கச் செய்கிறது.
மாம்பழம் : கண்ணீல் நீர் வடிதல், மாலைக்கண் நோய் இவைகளை சரி செய்ய வாரத்திற்கு இரண்டு முறை மாம்பழம் எடுத்துக்கொண்டால் போதும்.., அ
துவும் இப்போது மாம்பழம் சீசன் என்பதால் அல்போன்சா எடுத்துக்கொள்வது இன்னும் உடலுக்கு சிறந்தது.
பீன்ஸ் : நார்ச்சத்து அதிகம் இருப்பதால் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. எலும்புக்கு தேவையான ஆரோக்கியத்தை தருகிறது.
நுங்கு : வெயில் காலத்தில் அதிகமாக பரவ கூடிய நோய் “அம்மை” இவை வாராமல் தடுக்க நுங்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
திராட்சை : திராட்சையில் இருக்கும் நீர்ச்சத்து உடலுக்கு மிகவும் நல்லது.

முக்கியமாக கர்ப்பிணி பெண்களுக்கு, கர்ப்பகாலத்தின் போது ஏற்படும் ரத்தக்கசிவு, மற்றும் கர்ப்பபையில் ஏற்படும் தேவையற்ற சுருக்கம் இவற்றை சரி செய்ய திராட்சை உதவுகிறது.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி