வீரபாண்டி கெளமாரி அம்மன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..!!
தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கெளமாரி அம்மன் கோவிலில் மே 9ம் தேதி திருவிழா தொடங்கியது. தொடக்க நாளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின் பூ அலங்காரத்தில் அம்மன் பல்லக்கில் உலா வந்தார். அன்று மாலை 4:00 மணிக்கு அம்மன் கோவிலை வந்தடைந்தார்.
பின் மறுநாள் மே 10ம் தேதி காலை 3:00 மணியளவில் மின் அலங்காரத்தில் உலா வந்தார், இதில் கிராம மக்கள் அனைவரும் தீப ஆராதனை செய்து வழிபட்டார். திருவிழா தொடங்கிய நாளில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து சென்றுள்ளனர். நேற்று மாலை 4:00 மணியளவில் முல்லை ஆற்றில் பக்தர்கள் குளித்து உடலில் சேரு பூசி மடிப்பிச்சை எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து இன்று காலை ஏராளமான பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி, காவடி, ஆயிரம் கண் பானை, மண் கலயத்தில் தீர்த்தம் எடுத்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தியுள்ளனர்.
தினமும் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வதால், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டு இருப்பதால் பல சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
-வெ.லோகேஸ்வரி
Discussion about this post