சமையல் பொருட்களில் பூச்சு வராமல் இருக்க இதை செய்ங்க..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- காய்ந்த மிளகாய் சிலவற்றை அரிசியில் போட்டு வைத்தால் வண்டு பிடிக்காது.
- சின்ன பெருங்காய கட்டியை பருப்புகளில் வைத்தால் வண்டு வராது.
- மிளகாய்ப்பொடியில் வண்டு பிடிக்காமல் இருக்க பெருங்காய கட்டியை ஒரு துணியில் வைத்து மூட்டை மாறி கட்டி அதனை மிளகாய்ப்பொடியில் போட்டு வைக்கலாம்.
- உளுத்தம் பருப்பில் வண்டு வராமல் இருக்க, பருப்பை வாங்கியதும் அதனை முறத்தில் போட்டு தட்டியபின் அதில் இருக்கும் மாவு வெளியேறியதும் அதனை டப்பாவில் போட்டு வைக்கலாம்.
- பிரியாணி அரிசியில் வண்டுகள் வராமல் இருக்க அதில் சிறிது தூள் உப்பு கலந்து நிழலில் காயவைத்து எடுத்து வைக்கலாம்.
- துவரம் பருப்பில் வண்டு பிடிக்காமல் இருக்க அதில் காய்ந்த வேப்பிலையை போட்டு வைக்கலாம்.
- கோதுமையில் பூச்சி பிடிக்காமல் இருக்க அதில் சிறிது வெந்தய கீரையை போட்டு வைக்கலாம்.
- மைதா மற்றும் ரவாவில் உலர்ந்த வேப்பிலையை போட்டு வைத்தால் வண்டு பிடிக்காது.
- தனியாவில் பூச்சு பிடிக்காமல் இருக்க அதில் சில துண்டுகள் அடுப்புக்கரியை போட்டு வைக்கலாம்.
- தானியம் மற்றும் பயறு வகைகளில் சீக்கிரம் வண்டு வந்துவிடும் அதை தடுக்க அந்த டப்பாவில் பூண்டு, மஞ்சள் துண்டு மற்றும் வசம்பை போட்டு வைக்கலாம்.
- புளியில் பூச்சு மற்றும் புழுக்கள் வராமல் இருக்க புளியின் கொட்டைகளை நீக்கிவிட்டு அதை நன்றாக வெயிலில் காய வைத்து கல் உப்பை கலந்து டப்பாவில் வைக்கலாம்.
- இனிப்பு பொருட்களில் உதாரணமாக சர்க்கரையில் எறும்புகள் அண்டாமல் இருக்க அதில் சில கிராம்பை போட்டு வைக்கலாம்.
- சமையல் அலமாரியில் வண்டுகள் மற்றும் பூச்சுகள் வராமல் இருக்க காய்ந்த வேப்பிலை , உலர்ந்த எலுமிச்சை தோல், ஆரஞ்சு தோல் ஆகியவற்றை வைக்கலாம்.