கர்ப்பப்பை நீக்கினால் தாம்பத்யத்தில் பிரச்சனையா..?
பெண்களுக்கு உள் உறுப்புகளில் முக்கியமான இனப்பெருக்க உறுப்பாக கர்ப்பப்பை திகழ்கிறது. ஆரம்பத்தில் உள்ளங்கை அளவு கொண்ட இந்த கர்ப்பைபை முழு வளர்ச்சி அடைந்ததும் 2 அல்லது 3 குழந்தைகளை கூட தாங்கும் அளவிற்கு விரிந்து கொடுக்கக்கூடியது.
பல பெண்கள் மாதவிடாய் காலத்தில் நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.
சிலருக்கு கர்ப்பப்பையில் புண்கள், கட்டிகள் ஆகியவையும் வருதுண்டு இதனால் அவர்கள் கர்ப்பப்பையை எடுக்கக்கூடிய சூழலுக்கு கூட தள்ளப்படுகிறார்கள்.
கர்ப்பப்பை நீக்கிவது என்பது அவர்கள் வயதைப் பொறுத்து எடிக்கக்கூடிய ஒரு தீர்வாகும்.
கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்கு பிறகு முன்பு இருந்தது போல தாம்பத்திய உறவு சாத்தியமில்லை எனப் பலராலும் சொல்லப்படுகிறது, ஆனால் கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்கு பிறகு முதல் 3 மாதங்கள் மட்டும் அந்த காயம் ஆறும் வரை தாம்பத்திய உறவில் ஈடுபடக் கூடாதே தவிர மற்ற நாட்களில் எல்லாம் முன்பு இருந்ததை போலவே இருக்கலாம். அதற்கு எந்தவொரு பயமும் தேவையில்லை.
சில பெண்கள் வலி மற்றும் ரத்தப்போக்கின் காரணமாக முன்பு இருக்காத தாம்பத்திய இன்பம், அறுவை சிகிச்சைக்கு பிறகு கிடைப்பதாக சொல்லகிறார்கள்.
கர்ப்பப்பை நீக்கிய பிறகு பெண்களுக்கு மாதவிடாய் வராது. ஆனால் அத்தகைய பெண்கள் மெனோபாஸ் அடைவதை அவர்களுடைய உடல் அறிகுறிகள் உணர்த்து. அவை, உடலில் திடீரென சூடு பரவுவதோடு உடல் முழுக்க வியர்த்துக் கொட்டும். முடி உதிர்வு, தூக்கமின்மை, சரும வறட்சி, அந்தரங்க உறுப்பில் வறட்சி போன்றவை ஏற்ப்படும். அப்படி ஏதேனும் தென்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.
