அடுத்த முறை இத ட்ரைப் பண்ணி பாருங்க..!
வாழைப்பூ மற்றும் வாழைத்தண்டை நறுக்கி மோர் கலந்த நீரில் போட்டு வைத்தால் அதன் நிறம் மாறாது.
சப்பாத்தி நீண்ட நேரம் சாஃப்டாக இருக்க மாவு பிசையும்போது அதனுடன் சிறிது வெண்ணெய் சேர்த்து பிசைந்து சுட்டால் சூப்பராக இருக்கும்.
கீரையை கூட்டு மற்றும் பொரியல் செய்யும்போது அதன் நிறம் மாறாமல் இருக்க அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கலாம்.
கேரட்டை அரைத்து மோரில் கலந்து குடித்து வர உடல் எடை குறையும்.
சாம்பார் சாப்பிடுவதினால் உருவாகும் வாயு பிரச்சனைகளுக்கு பருப்பு வேகவைக்கும்போது வரும் நுரையை எடுக்க வேண்டும்.
ஆப்பம் ருசியாக இருக்க வேண்டும் எனில் மாவு அரைக்கும்போது தேங்காய் துருவல், வாழைப்பழம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து ஆப்பம் சுடலாம்.
நறுக்கிய வெங்காயம் நீண்ட நேரத்திற்கு வாடாமல் இருக்க அதில் வெண்ணெய் சிறிது கலந்து வைக்கலாம்.
காய்கறி பொரியல் செய்யும்போது அதிக நீரை ஊற்றி வேகவைக்காமல் கொஞ்சமாக நீர் ஊற்றி வேகவைத்தால் அதன் சத்துக்கள் அப்படியே கிடைக்கும்.
இஞ்சி காய்ந்து போகாமல் இருக்க வீட்டில் பூந்தொட்டி இருந்தால் அதில் போட்டுவைத்து தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.
கட்டி பெருங்காயம் ஒட்டிக்கொள்ளாமல் இருக்க அதனுடன் பச்சை மிளகாய் ஒன்றை போட்டு வைக்கலாம்.
வாழைப்பழத்தின் காம்பு பகுதியை கவரில் சுற்றி கட்டி வைத்தால் நாங்கு நாட்களுக்கு கருக்காமல் இருக்கும்.
வத்த குழம்பு வைக்கும்போது அதில் சிறிது மிளகுத்தூள் சேர்த்து இறக்கினால் நல்லா சுவையாக இருக்கும்.