கறிவேப்பிலை தோசை சாப்பிட்டு இருக்கீங்களா..!
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி – 1 1/2 கப்
பச்சரிசி – 1/2 கப்
உளுந்தம் பருப்பு – 3/4 கப்
கருவேப்பிலை – 2 கப்
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 4
சீரகம் – 1/2 ஸ்பூன்
வரமிளகாய் – 5
சின்ன வெங்காயம் – 4
உப்பு – சுவைக்கு ஏற்ப
எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் இட்லி அரிசி, பச்சரிசி மற்றும் உளுத்தம் பருப்பு அரிசி ஆகியவற்றை கழுவி 4 மணி நேரத்திற்கு நீரில் ஊறவைக்கவும்.
பின் அதனை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, வரமிளகாய், சீரகம் ஆகியவற்றை சேர்த்து வதக்கி பின் ஆற வைக்க வேண்டும்.
ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த அரைத்த கலவையை தோசை மாவில் கலந்துக் கொள்ள வேண்டும்.
தோசை மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளலாம், இப்போ தோசை மாவு ரெடி.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டியில் மாவை எடுத்து தோசை தேய்த்துவிட்டு மேலே எண்ணெய் தடவி இருபுறமும் வேகவைத்து எடுக்க வேண்டும்.
அவ்வளவுதான் அருமையான சுவையில் கறிவேப்பிலை தோசை தயார், இதனுடன் தேங்காய் சட்னி வைத்து சாப்பிடலாம் ரொம்ப ருசியாக இருக்கும்.