“நீங்கள் இந்தியாவின் சாம்பியன்..” வினேஷ் போகத்துக்கு பிரதமர் மோடி ஆறுதல்..!
நேற்று ஒலிம்பிக் மல்யுத்தத்தில் நடைபெற்ற பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவில் அரை இறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன், வினேஷ் போகத் போட்டியிட்டனர்.. இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட வினேஷ் போகத். முதல் நிமிடத்திலேயே யூஸ்னிலிஸ் நிலை தடுமாறி விழுந்துள்ளார்..
அதனால் அவர் எந்த ஸ்கோரும் எடுக்கவில்லை. பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஒலிம்பிக் மல்யுத்த அரையிறுதியில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு வினேஷ் போகத் முன்னேறினார். அதன் மூலம், வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததுடன், ஒலிம்பில் மல்யுத்த மகளிர் பிரிவின் இறுதி போட்டிக்கு முன்னேறி முதல் இந்தியர் என்ற பெருமையை தட்டி சென்றார்..
50 கிலோ எடை பிரிவில் போட்டியிட்ட வினேஷ் போகத்துக்கு இந்திய நேரப்படி இன்று காலை 9 மணியளவில் எடை தகுதி சோதனை செய்தபோது 50 கிலோ மற்றும் 100 கிராம் எடை இருந்துள்ளது. நிர்ணயித்த 50 கிலோவைவிட 100 கிராம் எடை அதிகம் இருந்த காரணத்தால் வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால் 50 கிலோ எடை பிரிவு பெண்களுக்கான ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் அமெரிக்க வீராங்கனைக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. போட்டியின்றி அவர் தங்கப் பதக்கமும் தட்டி சென்றார்.. வெள்ளிப் பதக்கம் யாருக்கும் வழங்கப்படாத நிலையில். வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி முறைப்படி நடத்தப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் மல்யுத்த சங்கம் அறிவித்துள்ளது.
இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இந்நிலையில், வினேஷுக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறியுள்ளார். தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில், “வினேஷ் நீங்கள் இந்தியாவின் சாம்பியன். நீங்கள் இந்தியாவின் பெருமை. ஒவ்வொரு இந்தியருக்கும் வினேஷ் போகத் உத்வேகம் அளிப்பவராக இருக்கிறார். இந்த பின்னடைவு வேதனை அளிக்கிறது. எனது வருத்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை” என்று மோடி கூறியுள்ளார்.
வினேஷ் தகுதி நீக்கம் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்திய நிலையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று மாலை விளக்கமளிக்க இருக்கிறார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..