ADVERTISEMENT
மதுராந்தகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகன பேரணி…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகன பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து, அறிவொளி கலைக்குழு மூலம் விழிப்புணர்வு தெருமுனைப் பிரச்சாரம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக நடைபெற்ற மூன்று சக்கர வாகன பேரணியை மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினையும் கையெழுத்திட்டு தொடங்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கான துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் மணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி மற்றும் அனைத்து அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.