மகளிர் வாக்குகள் திமுக-வுக்கு தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!
மகளிர் வாக்குகள் திமுக-வுக்கு தான் என்பதில் சந்தேகம் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் , மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கி, விடியல் பயணம் வரை மகளிருக்காக நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் மகளிரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், இனி எந்த காலத்திலும் மகளிர் வாக்குகள் திமுகவுக்குத் தான் என்பதில் சந்தேகம் வேண்டியதில்லை என்றும் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு நாம் கைகாட்டும் நபர் பிரதமராக வேண்டும் என்றால் நாற்பது தொகுதிகளையும் வென்றாக வேண்டும் என்று தெரிவித்தார்.
யார் வெற்றி பெறுவாரோ, அவரே வேட்பாளராக இருப்பார் என்றும், இந்த தொகுதிக்கு இவர் தான் என்று எந்த உறுதியும் இல்லை என தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் மாநாட்டு ஒருங்கிணைப்பாளராக நேரு நியமனம் செய்யப்பட்டார்.
அதைதொடர்ந்து, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் 4-வது மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார்.
அதில், இன்றைக்கு மக்கள் இயக்கமாக மாறியிருக்கும் நீட் விலக்கு என்கிற நம் இலக்கு, மக்களின் பேராதரவுடன் நிறைவேறியே தீரும் என தெரிவித்தார்.
மாநில உரிமைகளையும், மருத்துவக் கட்டமைப்பையும் சிதைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரான ஜனநாயக அறப்போர்க் களமாக நடைபெறும் சமூக சமத்துவ ம் மருத்துவர்கள் மாநாடு போராட்டத்தில் எப்போதும் துணைநிற்போம் என தெரிவித்தார்.
மக்களின் உயிர் காத்து, அவர்களின் ஆயுளை நீட்டிக்கும் நவீன அறிவியல் மருத்துவத்தை நீர்த்துப் போகச் செய்கிற வகையில் மிக்ஸோபதி (Mixopathy), ஒருங்கிணைந்த மருத்துவம், வேதகால மருத்துவம், ஆன்மீக மருத்துவம், சோதிட மருத்துவம் என்று போலி அறிவியலை திணிக்கும் முயற்சிகள் நடந்துகொண்டு வருவதாக தெரிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.