இனி வீடு தேடி மருத்துவம்..! அதுவும் 2 நாளில்..?
வேலூர்மாவட்டம்,காட்பாடியில் இந்திரா மருத்துவமனை மற்றும் அப்போலோ மருத்துவமனையும் இணைந்து
அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும் மற்றும் வீடு தேடி சென்று மருத்துவ சேவை வழங்கும் திட்டத்தையும் இன்று துவங்கியுள்ளனர்.
அப்போலோ மருத்துவமனையின் முதன்மை அதிகாரி நவீன் இந்திரா மருத்துவமனையின் இயக்குநர் சங்கர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
அப்போலோ மருத்துவமனையின் சார்பில் முழு உடற்பரிசோதனை வழங்க அப்போலோ மருத்துவமனையும் இந்திரா மருத்துவமனையும் சேர்ந்து செயல்படுவோம்.
அனைத்து வசதிகளுடனும் முழு உடற்பரிசோதனை மற்றும் உலகத்தில் உள்ள எல்லா பரிசோதனைகளும் இங்கு செய்யப்படும் இந்தியா முழுவதும் என்ன முழு உடற்பரிசோதனைக்கு அப்போலோ மருத்துவமனை கட்டணம் நிர்ணயம் செய்துள்ளதோ அதே கட்டணம் தான் மக்களிடமிருந்து பெறப்படும்.
வீட்டிற்கே சென்று மக்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு முழு பரிசோதனையும் செய்து 24 மணி நேரத்தில் துல்லியமான முடிவுகள் வழங்கப்படும் மேலும் ஒவ்வொரு வீட்டிலும் நீரிழிவு கொளஸ்ட் ரால் நோயாளிகள் அதிகம் பாதிக்கபடுகின்றனர்.
இளைஞர்கள் பக்கவாதம், உள்ளிட்ட நோய்களால் பாதிக்கபடுகின்றனர் அவர்கள் பாதிப்பை முன் கூட்டியே தடுத்து உயிர்களை தடுக்க இந்த பரிசோதனைகள் உதவும் என கூறினார்கள்.
-பவானிகார்த்திக்