முதுமலை புலிகள் காப்பகத்தில் தானியங்கி கேமராக்கள் மூலம் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
முதுமலை புலிகள் காப்பகத்தில் தானியங்கி கேமராக்கள் மூலம் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
தேசிய புலிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி ஆண்டுதோறும் முதுமலை புலிகள் காப்பக வனத்தில், புலிகள் கணக்கெடுப்புப் பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி நடப்பு ஆண்டுக்கான புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.
இதற்காக முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட மசினகுடி, தெப்பக்காடு, முதுமலை, ஆகிய வனப் பகுதிகளில் தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் கூறுகையில், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஐந்து உள்கோட்ட வனச் சரகங்களில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக வனப் பகுதிகளில் மொத்தம் 191 இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அடிக்கடி புலிகள் உலவும் பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு கண்காணிப்புப் பணி நடைபெற்று வருகிறது. இந்தக் கணக்கெடுக்கும் பணி வரும் ஜனவரி 6-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்தனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
