ADVERTISEMENT
காரைக்கால் அருகே பட்டினச்சேரியில் காயத்துடன் கரை ஒதுங்கிய டால்பின் மீன்…
காரைக்கால் அருகே பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் காயத்துடன் கரை ஒதுங்கிய டால்பின் மீனை அதிகாரிகள் முதல் உதவி செய்து மீண்டும் பத்திரமாக கடலுக்குள் விட்டனர்.
காரைக்கால் அடுத்த பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் மீனவர்கள் கடற்கரையில் நின்று கொண்டிருந்த போது, காயமடைந்த நிலையில் ஒரு டால்பின் மீன் ஒன்று கரை ஒதுங்கி இருந்தது.
அந்த டால்பின் மீனை பார்த்த மீனவர்கள் வனத்துறை மற்றும் மீன்வளத்துறை, பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் காயமடைந்த நிலையில் இருந்த 5 அடி நீளமுள்ள டால்பின் மீனுக்கு முதலுதவி செய்து அப்பகுதி மீனவர்களின் உதவியுடன் மீண்டும் பத்திரமாக கடலுக்குள் அனுப்பி வைத்தனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.