“ஆண்களுக்கு ஏன் பாலின சோதனை இல்லை” வீராங்கனை சாந்தி கேள்வி..!! எம்.பி.கனிமொழி பதிவு..!!
கடந்த 2006ம் ஆண்டு தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீராங்கனை சாந்தி. ஆசியாவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.., அப்போது உச்சபட்ச விளையாட்டரங்கில் பாலின சோதனை நடத்தப்பட்டு தோல்வியடைந்ததற்காக சாந்தி அவர்களது பதக்கம் பறிக்கப்பட்டு வெளியேற்றம் செய்யப்பட்டார்..
இன்று வினேஷ் போகத்திற்காக நடந்துள்ள இந்த துயரம் தற்போது இந்தியர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.., இது போன்ற சம்பவம் 18 ஆண்டுகளுக்கு முன்பும் நடந்திருக்கிறது.., இந்த குழப்பத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் 10 லட்ச ரூபாய் பரிசு அறிவித்திருந்தது.
அப்போதைய முதலமைச்சராக இருந்த தலைவர் கருணாநிதி தலைமைச் செயலகத்தில் சாந்தியை பாராட்டி அரசு பதவியும்., பணமும் தர இருந்தார்.., அப்போ அங்கிருந்த சிலர் சாந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட தகவலை முதலமைச்சர் கருணாநிதியிடம் தெரிவித்துள்ளனர். அப்போது அங்கிருந்த அமைச்சர்கள் பதக்கம் இல்லாதவருக்கு பணமும் பதவியும் கொடுப்பதா..? என கேள்வி எழுப்பினர்.
ஆனால் அதற்கு கலைஞர் கருணாநிதி., ஓடியது அந்த கால்கள் தானே என கூறி வீராங்கனை சாந்திக்கு அரசு பதவியும் பணமும் வழங்கியுள்ளார்…. 18 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.., இதற்கு கனிமொழி எம்பி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..
அல்ஜீரியா நாட்டு குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃப்பை ஆதரித்து சில தினங்களுக்கு முன் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவில், “தலை நிமிர்ந்து நிற்கும் பெண்களின் பெண்மை எப்போதுமே கேள்விக்குறியாகவே இருக்கும்.
எங்கள் தடகள வீராங்கனை சாந்திக்கும் இப்போது இமானே கெலிஃப் ஆகிய உங்களுக்கும் அப்படிதான். உங்களின் வலிமையும் உறுதியும் எங்கள் அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது” என பதிவிட்டிருந்தார்.
உண்மையிலேயே இந்தியனாக எல்லோரும் வருத்தப்படக்கூடிய விஷயம். இந்திய நாட்டிற்கு கிடைக்க வேண்டிய பதக்கம் தவறிவிட்டது. இது மிகப் பெரிய இழப்பு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு செய்திகளை சொல்கிறார்கள் உண்மை நிலவரம் என்னவென்று தெரியவில்லை” என சாந்தி வருத்தத்தோடு தெரிவித்தார் .
இதுகுறித்து வீராங்கனை சாந்தி சொல்லவருவது என்னவென்றால்.., அன்று தமிழ்நாட்டு வீராங்கனைகளுக்கு குரல் கொடுத்ததும் இன்று வீரர்களுக்காக தனது ஆதங்கத்தை தமிழக அரசு மட்டுமே வெளிப்படுத்துகிறது. எனவே இந்திய வீர்களுக்காக நடக்கும் இந்த அநீதிகளுக்கு ஒன்றிய அரசு உடனே குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..