ஒரு நொடி வாழ்க்கை தி க்ரைம் – பகுதி – 9
ஜெயஸ்ரீ காணாம போனதுக்கும் அந்த கும்பலுக்கும் ஏதாவது சம்மதம் இருக்கோமோனு அபி யோசிச்சுட்டு இருக்காங்க..? அபி வேலை பார்த்த முன்னாள் ஆபிஸ் நிறுவனம் யாருடையதுனா ஹரிஷ் மற்றும் தேன்மொழி இவங்க 2பேருது தான்..
தேன்மொழி பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவ, ஹரிஷ் ஒரு பொண்ணை அடையனும் நினச்சா அவங்கள அடையாம விட்டதே இல்லை.. அப்படி இருந்தும் அந்த கம்பெனில வேலைப்பார்க்க காரணம் என்னனு அபி தேடுறாங்க..
அப்போ தான் அதை தேடி.. போறப்போ பல அதிர்ச்சி தகவல்கள் கிடைக்குது.. ஹரிஷ் கம்பெனில ஜெயஸ்ரீ மட்டும் இல்லை நிறைய பொண்ணுங்க வேலைய விட்டு போயி இருக்காங்க.. அவங்க கிட்ட கேட்ட அப்போ அதை விட வேற ஒரு நல்ல வேலை கிடைச்சதுனால வேலையை விட்டு போனதா சொல்லுறாங்க.. ஆனா ஒரு சில பேர் எங்க இருக்காங்கனு தெரியல..
இது என்னடா இவ்ளோ மர்மமா இருக்குனு அபி அந்த ஆபிஸ்ல இருக்க எல்லார் கிட்டையும் விசாரிக்குறாங்க.. அப்போ தான் ஜெயஸ்ரீ பத்தின.. தகவல் எல்லாம் கிடைக்குது..
ஹரிஷ் அப்போ.. பேர் மனோகர்.. அவர் அந்த கம்பெனிய பார்த்த வரைக்கும் அங்க இருக்க யாருக்கும் எந்த வித பிரச்சனையும் இல்லாம இருந்து.. இருக்கு அந்த கம்பெனில ஜெயஸ்ரீ வெறும்.. டிசைனரா மட்டும் இல்லாம.. மனோகருக்கு.. PA வா இருந்து இருக்கா.
மனோகருக்கு ஜெயஸ்ரீ ஒர்க் ரொம்ப பிடிக்கும் அதனால ஆபிஸ் சம்மந்தமா மட்டும் இல்லாம பர்சனலா என்ன சொன்னாலும் அவரு கேட்பாரு. அப்படி இருக்க அப்போ சில முடிவுகள் எடுக்குறது தேன்மொழிக்கு பிடிக்காது அதே சமயம் ஹரிஷ் அப்போ தான் வெளிநாட்டுல இருந்து வரான்..
தேன்மொழி ஒரு இடத்தை எப்படியாவது கைபற்ற ஆசைப்பட்டு மனோகர் கிட்ட கேட்குறா.., ஆனா மனோகர் அந்த வேலையை ஜெயஸ்ரீ பாக்க சொல்லுறாரு.. ஆனா அங்க போயிட்டு வந்த அப்புறம் ஜெயஸ்ரீ சொன்ன பதில கேட்டு ஷாக் ஆகி தேன்மொழிகிட்ட அந்த இடம் வேண்டாம் சொல்லுறாரு.. அதுக்கு அப்புறம் தான் ஜெயஸ்ரீ காணாம போறா..
அப்படி ஜெயிஸ்ரீ சொன்ன பதில் என்ன..? அதுக்கு அப்புறம் அவ காணாம போக காரணம் என்ன அப்படினு அடுத்த கதையில படிக்கலாம்…
லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..