பெண்களுக்கு தேவையானது..!
பருப்பு பொடி செய்வதற்கு துவரம் பருப்புக்கு பதில் பொட்டுக்கடலை, கொப்பரை தேங்காய், வரமிளகாய், பூண்டு ஆகியவற்றை சேர்த்து பொடி செய்தால் சுவையாக இருக்கும்.
மணத்தக்காளி வத்தகுழம்பு செய்யும்போது குழம்பு இறக்கும் சமையத்தில் அப்பளத்தை நொறுக்கி கலந்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
மீன் குழம்பு செய்யும்போது பொடிகளை சேர்த்து செய்வதற்கு பதிலாக மசாலாவை அரைத்து சேர்த்தால் குழம்பு அருமையாக இருக்கும்.
ரவை உப்புமா செய்யும்போது தண்ணீருக்கு பதிலாக தேங்காய்பால் சேர்த்து செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
பாத்திரத்தில் உட்புறத்தில் கறை இருந்தால் அதனை போக்க எலுமிச்சை தோல், உப்பு, வெங்காயத்தோல் ஆகியவற்றில் எதையாவது சேர்த்து நீர் ஊற்றி கொதிக்க வைத்த பின் தேய்த்தால் கறை நீங்கிவிடும்.
கீரை செய்யும்போது அதில் சிறிது எண்ணெய் சேர்த்து வேகவைத்து செய்தால் கீரையின் நிறம் மாறாது.
ஆப்பம் ஊற்றும்போது ஆப்பம் மாவு கடினமாக இருந்தால் அதில் சிறிது சூடான பால் சேர்த்து கலந்து ஆப்பம் ஊற்றினால் நன்றாக வரும்.
மெதுவடை செய்யும்போது உளுத்தம் பருப்புடன் சிறிது பச்சரிசி சேர்த்து ஊறவைத்து அரைத்து வடை சுட்டால் வடை நன்றாக மொறுமொறுவென இருக்கும்.
கோதுமை தோசை செய்யும்போது, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை வதக்கி மாவில் சேர்த்து செய்தால் சுவையாகவும் சூப்பராகவும் இருக்கும்.
பால் பொங்கலில் சர்க்கரைக்கு பதிலாக கற்கண்டு சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.
சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள சிறுநீர பிரச்சனை அனைத்தும் சரியாகும்.