எப்படி மாத்தி பேசுறாரு பாருங்க..!! இதுல எதை நம்புறது…?
இந்த மக்களை ஏமாற்றுவதில் இவர்களுக்கு எவ்வளவு சந்தோசம் பாருங்க மக்களே.. ஒரு விஷயத்தை ஏற்கனவே சொல்லிடாங்க அதை அப்படியே இன்னொருத்தன் எப்படி மாத்தி பேசுறாரு பாருங்க.., இவ்ளோ வேலை செஞ்சும் மண்டையில இருந்த கொண்டைய மறந்துட்டேனே என்கிற மாதிரி இந்த ஒரு பாட்டி பண்ணது காட்டி கொடுத்துடுச்சு.. என்ன புரியலையா..? சரி புரியுற மாதிரியே சொல்லுறன் கேளுங்க…
பிரபல தொலைகாட்சி நிறுவனங்கள் நடத்திய வரும் இந்த ரியாலிட்டி ஷோவில்., இந்த ஜோடிகள் பங்கேற்றது. இவர்கள் சிதம்பரத்தை சேர்ந்தவர்களாம்..
முதல் ஷோவில் சண்டை போடும் மாமனார் மாமியார் என்ற தலைப்பிலும்,
இரண்டாவது ஷோவில் கிராமத்தில் வசிக்க விரும்பும் பெற்றோர்கள், அவர்களை நகரத்திற்கு நகர்த்த முயலும் பிள்ளைகள் என்ற தலைப்பிலும் பேசினார்கள்…
எத்தனை ஷோக்களில் வேண்டுமானாலும் பேசட்டும்.. அதுவல்ல பிரச்சனை..
ஒரே நாளில் ஒளிபரப்பாகும் இரண்டு ஷோக்களிலும் முன்னுக்கு பின் முரணாக பேசுகின்றனர்…
முன்னதில், அவர் சிதம்பரத்தில் இருப்பதாகவும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேலை பார்ப்பதாகவும், அந்த அம்மா சென்னையில் பையனோட வீட்டில் ஐந்து வருடங்களாக இருப்பதாகவும் இதனால் இருவருக்கும் சண்டை வருவதாகவும் பேசுனாங்க..
இரண்டாவது ஷோவில், பத்து வருடங்களாக இருவரும் சென்னையில் இருப்பதாகவும் , சிதம்பரத்திற்கு செல்ல துடியாய் துடிப்பதாகவும் அவரது செலவுகளுக்கு மகன் இருபதாயிரம் வரை பணம் கொடுப்பதாகவும் பேசுகின்றனர்.
இரண்டு ஷோக்களிலும் மருமகள் வேற சாட்சி.. இப்படி ஸ்க்ரிப்ட் ஷோக்களால் நல்லா நம்மளை ஏமாத்துறாங்க.. என்னத்த சொல்றது…..
எல்லா நிகழ்ச்சிகளும் முன்பே ரிஹர்சல் செய்யப்பட்டு ஒளிபரப்ப படும் இந்த ஷோவிற்கு ஒரு சிலர் எதிர்பார்ப்பது வேரை.. கான்செப்ட் எப்படி வேண்டுமானாலும் இருக்கும். ஆனால் இப்படி ஒரு இடத்தில் ஒரு மாதிரி பேசுனா எதை நம்புறது சொல்லுங்க..?
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..