அழகான சருமம் வேண்டுமா..? இது ஒன்று போதும்..!
படிகாரம் என்பது இயற்கையான ஒரு கனிம உப்பு. இது பல ஆண்டுகளாக சரும பராமரிப்பு பொருட்கள் தயாரிக்கும் சாதனங்களில் பய்னபடுத்தப்படுகிறது. இது சருமத்திற்கு பலவித நன்மைகளை தருகிறது. அவற்றை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
படிகாரத்தின் நன்மைகள்:
சருமம் இறுக்கமாகிறது:
படிகாரமானது ஒரு துவர்ப்பு பொருளாகும். இது சரும துளைகளை சுருக்கி சருமத்தை இறுக்கமாக்குகிறது. இதனால் சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறைய அதிக வாய்ப்பு உண்டு.
முகப்பருவை குறைக்கிறது:
படிகாரத்தில் இருக்கும் கிருமி நாசினி பொருட்கள் முகப்பரு உண்டாக்கும் பாக்டீரியாவை அழிக்கிறது. முகப்பரு தீவிரத்தை குறைத்து, முகப்பரு தழும்புகளை படிப்படியாக சரிசெய்கிறது.
சரும நிறத்தை கூட்டுகிறது:
சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை குறைக்கிறது. இதனை தொடர்ந்து பயன்படுத்தும்போது சரும நிறத்தை கூட்டி பொலிவான தோற்றம் பெறலாம்.
எண்ணெய் பசையை கட்டுப்படுத்துகிறது:
சருமத்தில் அதிகபடியான எண்ணெய் பசை சரும பிரச்சனைகளை உண்டாக்கும். இந்த படிகாரமானது சருமத்தில் அதிகபடியான எண்ணெயை உறிஞ்சி, எண்ணெய் பசையை கட்டுப்படுத்துகிறது. இதனால் முகப்பரு மற்றும் பிற சரும பிரச்சனைகள் குறைகிறது.
வியர்வையை கட்டுப்படுத்தும்:
படிகாரமானது இயற்கையாகவே ஒரு வியர்வை தடுப்பானாக செயல்படுகிறது. இது அக்குள் மற்றும் பிற பகுதிகளில் உண்டாகும் அதிகபடியான வியர்வையை கட்டுப்படுத்துகிறது.
பயன்படுத்தும் முறை:
படிகாரத்தை நீரில் முக்கி பின் சருமத்தில் தேய்க்கவும். இதனை அப்படியே 20 நிமிடங்களுக்கு வைத்திருந்து பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவலாம். இரவு படுக்கைக்கு முன் இதை செய்யலாம். வாரத்தில் 2 முதல் 3 முறை செய்வது சிறப்பு.
கவனிக்க வேண்டியவை:
படிகாரத்தை அதிக நேரத்திற்கு சருமத்தில் வைக்க வேண்டாம். வறண்ட சருமம் கொண்டவர்கள் படிகாரம் பயன்படுத்தியதும் கட்டாயம் சிறந்த மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது முக்கியம். சிலருக்கு படிகாரம் ஒவ்வாமையை உண்டாக்கும் அப்படி இருந்தால் மருத்துவரை அணுகவும்.