காரசாரமான இறால் கறி..!
தேவையான பொருட்கள்:
இறால் அரை கிலோ
மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
மிளகாத்தூள் 3 ஸ்பூன்
தனியா தூள் 1 ஸ்பூன்
உப்பு தேவையானது
தனியா 2 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
மிளகு 1 ஸ்பூன்
ஏலக்காய் 4
கிராம்பு 4
பட்டை 3 துண்டு
காஷ்மீரி மிளகாய் 7
காய்ந்த மிளகாய் 7
எண்ணெய் தேவையானது
சோம்பு 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் 25 நறுக்கியது
பச்சை மிளகாய் 2 நறுக்கியது
கறிவேப்பிலை சிறிது
இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
தக்காளி 2 நறுக்கியது
தேங்காய் பால் 1 கப்
கொத்தமல்லி இலை நறுக்கியது.
இறாலை ஊறவைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எல்லாம் இறாலில் சேர்த்து ஊறவைக்க வேண்டும்.
ஒரு வாணலில் மசாலா அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எல்லாம் சேர்த்து லேசாக வறுத்து ஆறவைத்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு,வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
அதில் பச்சை மிளகாய்,கறிவேப்பிலை,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, தக்காளியையும் சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி வதங்கியதும் இறால் போட்டு அதில் மிளகாய்த்தூள்,அரைத்த மசாலா பொடி சேர்த்து கலந்து விடவும்.
மேலும் தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து மிதமான தீயில் வேக வைத்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
இப்போ காரசாரமான இறால் கறி தயார்.