மருமகளின் நகைகளை மகளுக்கு… இறுதியில் மருமகளின் விபரீதம்..போராட்டத்தில் உறவினர்கள்..!
தாம்பரம் அடுத்த மணி மங்கலம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் பிரேம்குமார் – மஞ்சுளா. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த வருடம் நவம்பர் 16ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்கு பிறகு மஞ்சுளாக்கும், அவரின் மாமியார் சித்ராவுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் மஞ்சுளா தன் கணவருடன் மணிமங்கலம் பகுதியில் தனிக்குடித்தனம் சென்றுள்ளார்.
இந்த நிலையில், மஞ்சுளாவுக்கு வரதட்சணையாக போட்ட 12 சவரன் தங்க நகைகளை மஞ்சுளாவின் மாமியார் சித்ரா வாங்கி அதை தன் மகளுக்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை மஞ்சுளா பலமுறை கேட்டும் சித்ரா கொடுக்காமல் தட்டிகழித்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து சித்ரா மஞ்சுளாவுக்கு வரதட்சணையாக போட்ட 12 சவரன் தங்க நகைகளை தன் மகளுக்கு கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆத்திரம் அடைந்த மஞ்சுளா மாமியாரின் மீது மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மணிமங்கலம் காவல் நிலையத்தில், நகைகளை ஜூன் 15 அன்று கொடுப்பதாக சித்ரா எழுதிக் கொடுத்துள்ளார். இதனால் மன வேதனையில் இருந்த மஞ்சுளா திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மஞ்சுளாவின் தற்கொலையால் உறைந்து போன உறவினர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை அருகே உள்ள ஜி எஸ் டி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவலறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து திவீர விசாரணை நடத்தி வருகின்றனர்..
-பவானி கார்த்திக்