மணமணக்கும் மணத்தக்காளி குழம்பு..!
தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் 3 ஸ்பூன்
மணத்தக்காளி வத்தல் கால் கப்
கடுகு அரை ஸ்பூன்
உளுந்து அரை ஸ்பூன்
வெந்தயம் அரை ஸ்பூன்
பூண்டு 5
வெங்காயம் அரை கப்
கறிவேப்பிலை சிறிது
பெருங்காயத்தூள் கால் ஸ்பூன்
தக்காளி 1
உப்பு தேவையானது
மஞ்சள்தூள் அரை ஸ்பூன்
மல்லித்தூள் 2 ஸ்பூன்
சாம்பார் பவுடர் 2 ஸ்பூன்
புளி எலுமிச்சை அளவு
கொத்தமல்லி இலை சிறிது
தண்ணீர் தேவையானது
செய்முறை:
ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து அதில் மணத்தக்காளி வத்தல் சேர்த்து பொரித்து தனியே வைக்கவும்.
பின் அதே எண்ணெயில் கடுகு, உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து பொரித்து பின் பூண்டு, வெங்காயம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அதில் தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின் அதில் பொரித்த மணத்தக்காளி வத்தல் சேர்த்து கலக்க வேண்டும்.
அனைத்தும் வதங்கியதும் மஞ்சள்தூள், மல்லித்தூள், உப்பு, சாம்பார்தூள் சேர்த்து கலந்து புளிக்கரைசல் மற்றும் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
குழம்பு நன்றாக கொதித்து சுண்டியதும் கொத்தமல்லி இலை தூவி இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் மணமணக்கும் மணத்தக்காளி குழம்பு தயார்.
