சமையல் குறிப்புகள்..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- வடைக்கு மாவு அரைக்கும்போது தயிர் சேர்த்து அரைத்து வடை சுட்டால் வடை சுவையாக இருக்கும்.
- புளியோதரையில் வறுத்த கடலை மாவு மற்றும் இஞ்சி துண்டுகள் சேர்த்து சமைத்தால் ரொம்ப சுவையாக இருக்கும்.
- பெருங்காயம் கட்டியாக இருந்தால் அதில் பச்சை மிளகாய் போட்டு வைத்தால் கட்டியாக மாறாது.
- தோசை மாவு புளித்துவிட்டால் அதில் தாளித்த கடுகு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து ஊத்தப்பம் செய்து சாப்பிடலாம்.
- புதினா சட்னி செய்யும்போது அதில் சிறிது வறுத்த வேர்கடலை செய்து அரைத்தால் சுவையாக இருக்கும்.
- ரசம் செய்யும்போது எண்ணெயில் பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலையை தாளித்து சேர்த்தால் ரொம்ப மணமாக இருக்கும்.
- வெண்டைக்காய் பொரியல் செய்யும்போது அதில் வறுத்த வேர்கடலை பொடித்து அதை சேர்த்து செய்தால் ரொம்ப ருசியாக இருக்கும்.
- சட்னிக்கு தேங்காய் மற்றும் பொட்டுக்கடலை செய்யும்போது அதில் வறுத்த வேர்கடலை சேர்த்து அரைத்தால் சட்னி சுவையாக இருக்கும்.
- பொங்கல் செய்யும்போது தண்ணியாகிவிட்டால் கவலை வேண்டாம் அதில் வறுத்த ரவை சேர்த்து கொண்டால் கெட்டியாக மாறிவிடும்.
- அல்வா, கேசரி செய்யும்போது இனிப்பில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து செய்தால் இனிப்பு திகட்டாமல் சுவையாக இருக்கும்.