“அப்பாவை பின்பற்றும் யுவன்” பாதிக்கப்பட்டவரிடம் இழப்பீடு கேட்டு நோட்டீஸ்..!!
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள லேக் ஏரியா பகுதியில், பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தங்கி வந்தார். அம்ஜத் பேகம் என்பவருக்கு சொந்தமான இந்த வீட்டில், பல மாதங்கள் தங்கியிருந்த யுவன், வீட்டு வாடகையை சரியாக தரவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும், பலமுறை செல்போனில் அழைப்பு விடுத்தும், அதனை ஏற்காத யுவன் சங்கர் ராஜா, இரண்டு ஆண்டுகளாக, அலைக்கழித்துள்ளாராம். இவ்வாறு தொடர்ச்சியாக நடந்த நிலையில், வீட்டு உரிமையாளரின் சார்பில், காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வீட்டு உரிமையாளர் தரப்பு நடந்துக் கொண்டதாகவும், இதற்கு 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் யுவன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், யுவன் சங்கர் ராஜா, வாடகை பாக்கி வைத்திருந்தது உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், யுவன் சங்கர் ராஜா வீட்டு உரிமையாளர் இடையே வாடகை ஒப்பந்தம் இருக்கும் நிலையில்.. ஆனால் பரிவர்த்தனைகள் எதுவும் நடைபெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்படும் என கூறப்படும் நிலையில், யுவன் சங்கர் ராஜாவுக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”