கட்ந்த 1971ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் நாடுகள் போர் புரிந்தன. இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் 93 ஆயிரம் வீரர்களுடன் இந்தியாவிடம் சரண் அடைந்தது. டாக்கா நகரில் டிசம்பர் 16ம் தேதி பாகிஸ்தான் ராணுவ தளபதி ஏ.கே.கே. நியாசி இந்தியாவின் லெப்டினன்ட் ஜெனரல் ஜக்ஜித் சிங் ஆவுரா முன்னிலையில் சரண் அடைந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். பின்னர், நியாசி காலை உணவு உண்டார். தொடர்ந்து, தனது அதிகாரிகளை சந்தித்தார். அதற்கு பிறகு என்ன நடந்தது தெரியுமா?
தொடர்ந்து, இந்திய ராணுவ வீரர்கள் முன்னிலையில் செய்தியாளர்களை ஏ.கே.கே. நியாசி சந்தித்தார். இந்த சமயத்தில் வங்கதேசம் நியாசியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தது. நியாசியை அவர்களிடத்தில் ஒப்படைத்ததால் போர்குற்றவாளி என்று அறிவித்து வங்கதேசம் மரண தண்டனை அளிதிருக்கும். ஆனால், வங்கதேசத்தின் கோரிக்கை ஏற்க மறுத்தது இந்தியா. பின்னர், நியாசி உள்பட 93 ஆயிரம் பாகிஸ்தான் ராணுவ வீரர்களை இந்தியா கொண்டு வந்து நாட்டின் பல பகுதிகளில் சில காலம் இந்திய ராணுவம் வைத்திருந்தது.
முதலில் கொல்கத்தா வில்லியம் கோட்டையில் போர்க்கைதியாக நியாசி அடைக்கப்பட்டிருந்தார். பின்னர், ஜபல்பூல் ராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டார். அவரின் இருப்பிடம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. போலீஸ் துறைக்கு கூட நியாசி வைக்கப்படுள்ள இடம் தெரியாது. அந்தளவுக்கு ரகசியம் காக்கப்பட்டது. பின்னர், 1972ம் ஆண்டு சிம்லா ஒப்பந்தம் இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே ஏற்பட்டது. இதையடுத்து, இரு நாடுகளும் போர்க்கைதிகளை சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தியா 93 ஆயிரம் பேரை அனுப்பி வைத்தது. கடைசியாக 1975ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஏ.கே.கே. நியாசி பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பாகிஸ்தான் சென்றதும் அவரது நிலைமை இன்னும் மோசமானது.நியாசி உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். மீடியாக்கள் உள்பட யாருடனும் பேச அனுமதிக்கப்படவில்லை. பாகிஸ்தான் ராணுவம் அ பதவிகள் மற்றும் ராணுவ விருதுகள் பறிக்கப்பட்டது. அவரது ஓய்வூதியமும் நிறுத்தப்பட்டது- மிக நீண்ட காலமாக, நியாசி தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 1975ம் ஆண்டு ஜுல்பீகர் அலி பூட்டோ பாகிஸ்தான் அதிபர் ஆன போது, நியாசிக்கு மீண்டும் பென்சன் வழங்கப்பட்டது. ஆனால், அவரின் பதவி லெப்டினன்ட் ஜெனரலில் இருந்து மேஜர் ஜெனரலாக குறைக்கப்பட்டது. பின்னர், பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்தே வெளியேற்றப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த அவர், அரசியலில் ஈடுபட்டார். ஆனால் இது நீண்ட காலம் நீடிக்கவில்லை, ஜியா-உல்-ஹக், ஜுல்பிகார் அலி பூட்டோவின் ஆட்சியை கவிழ்த்தபோது, காட்சி மீண்டும் மாறியது. நியாசி மீண்டும் கைது செய்யப்பட்டு கொஞ்ச காலம் சிறையில் வைக்கப்பட்டார். பின்னர், அரசியலில் இருந்தும் விலகினார்.
1971 ஆம் ஆண்டு போரில் அடைந்த தோல்விக்கு காரணத்தை அறிய பாகிஸ்தான் ஒரு குழுவை அமைத்திருந்தது. இந்த குழு 1982 ஆம் ஆண்டில், போரில் தோல்விக்கு ஜெனரல் நியாசி மீது ஊழல் குற்றச்சாட்டு , அலட்சியம், நெறிமுறையற்ற நடவடிக்கைகளே காரணம் என்கிற குற்றச்சாட்டை முன் வைத்தது. மக்கள் அவரை வங்காளத்தின் கழுதை என்று கேலி செய்யும் அளவுக்கு அவரது இமேஜ் கெட்டுப்போனது- ஆனாலும் போரில் தோல்விக்கு நான் காரணமில்லை. பாகிஸ்தான் அப்போதைய அதிபர் யாயா கான்தான் காரணமென்றும் நியாசி கூறி வந்தார். பின்னர் அவர் ‘கிழக்கு பாகிஸ்தானின் துரோகம்’ என்ற தலைப்பில் போர் பற்றிய புத்தகத்தையும் எழுதினார். இருப்பினும், நியாசி தனது புத்தகத்தில் கூறியுள்ள கருத்துக்களை பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
தொடர்ந்து, 2004ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி லாகூரில் ஏ.கே.கே. நியாசி மரணமடைந்தார்.