பேரு வச்சீங்களே.., சோறு வச்சீங்களா..? சிக்கிய எடப்பாடி கிழித்து எடுக்கும் நெட்டிசைன்கள்..!!
மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் குவியல் குவியலாக டன் கணக்கில் உணவுகள் கீழே கொட்டப்பட்டுள்ளன.., கொட்டப்பட்ட உணவில் மண்ணை அள்ளிப்போட்டு மூடிய திமுக, மதுரை வளையங்குளத்தில்,
கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டிற்காக அழைத்து வர பட்டவர்களுக்கு 300 கவுண்டர்கள் அமைக்கப்பட்டு, 3 வேலையும் உணவுகள் வழங்க திட்டமிட்டு இருந்தது, மாநாடு நடந்து கொண்டிருந்த பொழுது உணவு விநியோகம் செய்துள்ளனர்.
ஆனால் அப்படி விநியோகம் செய்யப்பட்ட உணவில் தரம் இல்லை எனவும், உணவு சரியாக வேகவில்லை என்பதால் புகார் அளித்த தொண்டர்கள் உணவை கீழே கொட்டிவிட்டு சென்றுள்ளனர்.
அந்த மாநாட்டு பந்தலில் சுமார் 1 டன் அளவிற்கு புளியோதரை மற்றும் சாம்பார் சாதம் கொட்டப்பட்டு வீணடிக்கப்பட்டு இருந்த நிலையில் குவியல் குவியலாக.., டன் கணக்கில் கெட்டு போன உணவுகளை வீடியோ எடுத்த சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
எனவே மாநாட்டு திடல் அருகே ஜேசிபி இயந்திரம் கொண்டு மாநாட்டு அருகே குழி தொண்டை உணவை கொட்டி மண் போட்டு புதைத்துள்ளது அதிமுக அரசு.., மலை போல் குவிக்கப்பட்டு இருந்த உணவை பறவைகள் உண்ண விடவில்லை அவற்றை முறையாக அப்புறப்படுத்தாமல்.., உணவை புதைத்து மண்ணை போட்டு மூடி சுற்று சூழலுக்கு தீங்கு விளைவித்த குற்றத்திற்காக அதிமுக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..