பாகிஸ்தான் மீது இந்தியா மீண்டும் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் 7 – 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் இந்திய ராணுவம் மீண்டும் எதிரியை அவர்கள் இடத்திற்குள்ளே நுழைந்து கொன்றது. இம்முறை ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களின் நடுவில் இருந்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி, ஜம்மு காஷ்மீரில் உள்ள கோட்லியின் நக்யாலில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகளின் 4 முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.. இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் 7 முதல் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.