ராமர் கோவிலால் பாஜகவிற்கு ஒட்டு..! துரைவைகோ பேட்டி..!
மதுரை அலங்காநல்லூர் தண்டலை பகுதியில் நடைபெறும் கட்சித் தொண்டரின் திருமண விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த மதிமுக தலைமை முதன்மை செயலாளர் துரை வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர்.
தமிழகத்தில் கருத்துக்ணிப்பு முடிவுகளின் படி திமுக கூட்டணி வெற்றி பெறுமா என்ற கேள்விக்கு..?
தேர்தல் களத்தில் நாங்கள் பிரச்சாரம் செய்யும் போது மக்களை சந்திக்கும் போதும் தமிழக அரசின் சிறப்பான திட்டங்களை கூறி வாக்கு கேட்டோம். அரசாங்கம் சிறப்பாக செயல்படும் என்பதை சொல்லி வாக்கு கேட்டோம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை 39 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என கூறி இருந்தோம் அதே நேரத்தில் இந்தியா முழுவதும் என்.டி.ஏ.கூட்டணி 360 தொகுதிகளில் ஜெயிக்கும் எனக் கூறியுள்ளனர். இன்னும் 48 மணி நேரம் உள்ளது முடிவுகள் தெரியவரும் .
திமுக ஆட்சியில் சமூக விரோதிகள் சட்டத்தை கையில் எடுப்பார்கள் என எடப்பாடி கூறிய கருத்துக்கு..?
அண்ணன் இபிஎஸ் அவர்கள் அதிமுக தலைவர் இதற்கு முன் அதிமுக ஆட்சியில் சட்டத்திற்கு புறம்பான விஷயங்கள் பெண்களுக்கான குற்றங்கள் போதைப்பொருள் போன்ற குற்றங்கள் நடைபெற்றுள்ளன. அது அதிமுக கட்சியில் நடைபெறவில்லை என கூற முடியாது அதை நாம் பொருட்படுத்த தேவையில்லை.
மதுவிற்கு எதிரான கான போராட்டங்களில் மதிமுக நிலைபாடு..?
மதுவிற்கு எதிரான கொள்கையில் மதிமுக தொடர்ந்து போராடும் தலைவர் வைகோ, மதிமுக ஆரம்பத்தில் இருந்தே மதுவுக்கு எதிரான கொள்கையில் உறுதியாக உள்ளோம்.
தலைவர் வைகோ பொருத்தவரை அது கருத்து மதிமுகவின் கருத்து நாங்களும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். தமிழக அரசிடம் படிப்படியாக மதுவை பொருத்தவரை மதுவிலாத தமிழகம் அமைய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.
சோசியல் மீடியாவில் கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்வது குறித்த கேள்விக்கு..? சோசியல் மீடியாவில் யாரைப் பற்றியும் கருத்து கூறலாம் என்ற நிலை உள்ளது தனிமனிதன் மற்றும் இயக்கங்களை பற்றி தவறான கருத்துக்களை பரப்பப்படுகின்றன.
அது தனிப்பட்ட மனிதர்கள் மற்றும் அந்த குடும்பங்களை பாதிக்கின்றது. பத்திரிக்கையாளர்கள் சேனல்கள் இதற்கெல்லாம் எடிட்டேரியில் மற்றும் சென்ஸார் கட்டுப்பாடு உள்ளது.
ஆனால் இன்று சோசியல் மீடியா வந்த பிறகு எளியவர்களின் குரல் வெளிவந்துள்ளது தெரியப்படுத்தப்படுகிறது. ஆனால் அதை எதிர்த்து குரல் கொடுப்பதற்கு சோசியல் மீடியா பயன்படுகிறது. சமயங்களில் தனி மனிதனையோ இயக்கத்தையோ தவறான விஷயங்களை சொல்லி அவர்களை விமர்சனம் என்ற பெயரில் செய்வது கண்டிப்பாக ஒரு வரைமுறை வேண்டும்.
இது குறித்து நான் பேச விரும்பவில்லை. சமூக வலைதளங்களில் கட்டப்பஞ்சாயத்து குறித்த கேள்விக்கு..?
மஞ்சப்பத்திரிகை என்பது எல்லாக் காலத்திலும் உண்டு. பத்திரிக்கை என்பது புனிதமானது. அவற்றில் ஒரு சில கருப்பு ஆடுகள் உள்ளனர் .
50 வருடங்களுக்கு மேல் உள்ளது ஒரு சில பேர் கட்டப்பஞ்சாயத்து போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் கருப்பாடுகள் இருக்கத்தான் செய்வார்கள் மக்கள் அவற்றை புரிந்து கொண்டு தவிர்ப்பது நல்லது .
தேர்தல் களம் அரசியலில் மக்களை சார்ந்த அடிப்படை விஷயங்கள் பற்றி தான் குறிப்பிட வேண்டும். வேலையின்மை பணம் வீக்கம் மக்களுக்கு தேவையான கல்வி மருத்துவம் போன்றவற்றை ஒரு இயக்கமோ குறித்து பேசி கேட்க வேண்டும் வாக்கு கேட்கும் போது மக்களுக்கு தேவையான அடிப்படை விஷயங்களை குறித்து கேட்க வேண்டும் .
முதல் முறையாக இந்த தேர்தலை பொருத்தவரை மத்திய ஆட்சியில் இருக்கிற பாஜக மற்றும் பிரதமர் மோடி முழுமையாக பத்து வருடம் என்ன செய்தோம் என்பதை கூறாமல்.
வேலை வாய்ப்புகள் பற்றியோ பண வீக்கத்தை பற்றியோ எதிர்க்கட்சிகள் தினமும் கேள்வி கேட்கும் போது அதைப் பற்றி கூறாமல் பெட்ரோல் மற்றும் எரிவாயு விலை உயர்வை பற்றி குறிப்பிடாமல் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்காமல் பல விஷயங்கள் இருக்கும் போது அதைப் பற்றி கூறாமல் மதத்தைப் பற்றியும் ஜாதியை பற்றியும் மக்கள் மத்தியில் பிரிவினையை உருவாக்குகின்றனர்.
நானும் இந்து மதத்தை சார்ந்தவன் தான் கோயிலுக்கு செல்கிறேன். அதே நேரத்தில் அரசியலில் மதத்தை தவிர்த்து ஜனங்களுக்கு தேவையான செய்ய வேண்டிய விஷயங்களை கூறாமல் இன்னும் 48 மணி நேரத்தில் தேர்தல் முடிவு வரப் போகிறது. இந்தியா கூட்டணியில் நாங்களும் மக்களிடம் விவாதங்களை வைத்தோம்.
அவர்களும் மக்களிடம் விவாதங்களை வைத்தார்கள் என்ன முடிவு என்பதை பார்ப்போம் என துரை வைகோ கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்கு என்ன செய்தோம் என்பதைக் கூறாமல் வேலை வாய்ப்பு பொருளாதார வளர்ச்சி தொழில் வளர்ச்சி போன்றவற்றை பற்றி குறிப்பிடாமல் ராமர் கோவில் பற்றி கூறி வாக்குகள் கேட்டு மக்களிடையே மத ஜாதி உணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
தமிழகத்தில் முதல்வர் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்து மக்களிடையே வரவேற்பு பெற்றதால் தான் 39 /39 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என துரை வைகோ தெரிவித்துள்ளார்.
– லோகேஸ்வரி.வெ.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..