திங்கட்கிழமை இந்த விரதம் இருந்து பாருங்க..!! சிவன் சொன்ன மந்திரம்..!!
திங்கள் கிழமை என்றாலே அது சிவனுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற நாள்.., இந்த நாளில் நாம் விரதம் இருந்து வாழிபாடு செய்தால் சிறந்த பலன்கள் கிடைக்கும்.
இன்றைய நாளில் நாம் என்ன விரதம் இருக்க வேண்டும்.., அப்படி இருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்.., என்பது பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.
சிவன் வழிபாட்டுக்கு சோமவாரம் இருந்து வழிபாடு செய்தால் நன்மைகள் வந்து சேரும். சிவன் அடியார்கள் மட்டுமின்றி வாத்தனாவர்கள் இந்த விரதம் இருந்து வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீக உண்மை.
இன்றைய நாளில் சிவன் கோவிலுக்கு சென்று வில்வ இலையால் அர்ச்சனை செய்து வழிபட்டால் நாம் செய்த அனைத்து பாவங்களும் நீங்கும்.
சோமன் என்ற பெயர் சிவனின் மறு பெயர்.., சந்திரனை முடி சூடிக்கொண்ட சிவன் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ப்ரி காவடி பழனி ஆண்டவர் ஆஸ்ரம்பத்தில் அமைந்துள்ளார்.
அந்த இடத்தில் அவருக்கு மறு பெயரும் சூப்பட்டது., “சர்வலோக நாயகி சமேத சர்வ தோஷ நிவஸ்திகர்” என்ற பெயரும் உண்டு. இந்த பெயர் உலகத்தில் அமைந்துள்ள சிவன் எவருக்கும்.., பெயரிடவில்லை.
சர்வ தோஷ நிவஸ்திகர் பார்வை 12 ராசிகர்களுக்கும் ஏற்ற போல சிவ லிங்களை அமைத்து வழிபட்டதால் பிரசித்தி பெற்றது. இத் திருத்தலத்தில் சிவன் தெற்கு திசையை நோக்கி எழுந்தருளியுள்ளார்.
அதாவது தெற்கு திசை என்பது எமனை எதிர்கொள்ளும் திசை.., இத்திசையில் இருக்கும் சிவனை வழிபட்டால் எமபயம் நீங்கும் என்பது ஐதீகம்.
இத் திசையில் எழுந்தருளி இருக்கும் சிவனை வழிபட்டால் இருதய நோய் குணமாகி விடும்.
இன்றைய நாளில் சிவனை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கி விடும்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்க வேண்டும் என்றால் இன்றைய நாளில் சிவனை வழிபட்டால் லாபம் அதிகரிக்கும்.
திருமண ஆகாத ஆண் அல்லது பெண் வழிபட்டால் திருமண தோஷம் நீங்கும்
இன்றைய நாளில் அன்னதானம் அல்லது வாயில்லா ஜீவ ராசிகளுக்கு உணவு அளித்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஆன்மீக ஐதீக உண்மை.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..