கள்ளழகர் ஆற்றில் இறங்க இதுதான் காரணமா..?
மதுரை என்றாலே மல்லிகைப்பூ, அதுக்கு அப்புறம் நமக்கு நினைவுக்கு வருவது மதுரை மீனாட்சி அம்மன்தான் தின்தோறும் திருவிழாவாக இருக்கக்கூடிய அந்த நகருக்கு சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் மீனாட்சி கல்யாணமும், மறுநாள் தேரோட்டமும், அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் .
மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் :
மதுரையே திருவிழாவாக கொண்டாடும் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவம் இன்று காலை மேளதாளங்கள் மற்றும் வேட்டு சத்தம் முழங்க அதிகாலை 8.35 முதல் 8.59 மணிக்குள் நடைபெற்றது.
அதன் பின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் விருந்து நடைபெற்றது,., இதில் லட்சம் கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.. இதில் பங்கேற்ற அனைத்து பெண் பக்தர்களுக்கும் தாலி கயிறு மஞ்சள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
பக்தர்களின் பாதுகாப்பிற்காக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை தொடர்ந்து நாளை காலை 6.30 மணியளவில் தேரோட்டமும் வருகின்று ஏப்ரல் 23-ம் தேதி தீர்த்தம், தெய்வேந்திர பூஜை, ரிஷப வாகனங்களில் சுவாமி புறப்பாடுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
அழகர் ஆற்றில் இறங்குவது எவளோ முக்கியமான வீசியமோ அந்த அளவுக்கு அவரை காண்பதற்கு கூட்டம்கூட்டமாக பெண்கள் அனைவரும் தலையில் மல்லிகை பூவை சூடிக்கொண்டு செல்லும்போது பார்ப்பதற்கு தனி அழகாக தெரியும்.
தனது தங்கையின் கல்யாணத்தை பார்ப்பதற்காக அழகர் மலையில் இருந்து இறங்கி வந்தார் வரும் வழியில் பக்தர்கள் காட்சி கொடுப்பதால் தங்கையின் திருமணத்தை பார்க்க முடியவில்லை மதுரை வரை வந்த அழகர் திரும்பி செல்லும்போது வைகை ஆற்றில் எழுந்தருளி செல்கிறார்.
அழகர் என்றாலே சிறப்புதான் அதிலும் அவர் ஆற்றில் இறங்கும் போது எந்த கலர் உடை அணிந்து வருகிறாரோ அந்த அளவுக்கு மக்கள் செழிப்பாக இருப்பார்களா கஷ்டப்படுவர் என்று சொல்லுவார்களாம் அதை பார்பதற்காகா மக்கள் ஆர்வத்துடன் இருப்பார்களாம்.
பச்சை நிற உடை அணிந்திருந்தாள் அந்த வருடம் செழிப்பாக இருக்கும், சிகப்பு நிறம் உடையாக இருந்தால் அந்த வருடம் விளைச்சல் போதுமானதாக இருக்காது, மஞ்சள் நிறமாக இருந்தால் மங்களகரமான நிகழ்வுகள் நடக்கும் என்பது ஒரு நம்பிக்கை பலகோடி மக்களை காண்பதற்கு அழகர் குதிரையில் அமர்ந்து அடி அசைந்து வருவதை பார்ப்பதற்கு இரு கண்கள் போதாது..
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரை ஏப்ரல் 12-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.., அதனை தொடர்ந்து ஏப்ரல் 19ம் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், நேற்று திக்விஜயம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..