“கண்ணுடைய நாயகி அம்மன்” ஆயிரம் கண்ணுடையாள்..! கண்ணாத்தாள் வரலாறு…!!
நேத்ராம்பிகை, கண்ணாம்பிகா, ஆயிரம் கண்ணுடையாள், கண்ணாத்தாள் என்று பல பெயர்களால் அழைக்கப்படுபவர் இவர். பக்தர்களால் கண்ணுடையால் என்றே அன்போடு போற்றப்படுகிறார். கண்கொடுக்கும் தெய்வவும், கண் முன் நடக்கும் அநீதிகளை கண்டு தும்சம் செய்யும் தெய்வம் “கண்ணுடைய நாயகி அம்மன்” வரலாற்றை பற்றிப் பார்க்கலாம்.
கண்ணுடைய நாயகி அம்மன் பெயர் அர்த்தம் :
ஆணவத்தின் வடிவமான சண்டா சூரனை அழிக்க வடிவெடுத்து “மஹா சக்தி” தேவர்கள் காணும் வகையில், தேவர்களுக்கு ஞானக்கண் கொடுத்து, அவர்களுக்கு தன் திருவுருவை காட்டியதால் கண்ணுடையாள் என்று அழைக்கப்பட்டார்.
தல வரலாறு & அம்மன் அவதரித்த வரலாறு :
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சிவகங்கை மாவட்டம், நாட்டரசன் கோட்டை அருகில் அமைந்துள்ளது பனங்காடி கிராமம். அங்கு வாழ்ந்து வந்தவர் தான் விவசாயி தங்கவேலு. மனைவியை இழந்த இவர் தனது இரு குழந்தைகளுடன் கிராமபுரத்திற்கு வெளியே கால் நடைகளை வளர்த்தும், அதன் மூலம் கிடைத்த பால், அதில் இருந்து தயிர், மோர் மற்றும் நெய் வைத்து வியாபாரம் பார்த்து வந்துள்ளார்.
இவரது மகள் மரகதத்திற்கு கண் பார்வை தெரியாது, இருந்தாலும் அவளுக்கு மன தைரியம் மற்றும் மனப்பக்குவம் அதிகம் உண்டு. பிறரால் முடியதா காரியங்களை கூட இவள் சுலபமாக நடத்திடுவாள். மகன் செல்லப்பாண்டியோ அவர்களுக்கு உதவியாக இருப்பான்.
இவர்கள் கறக்கும் பாலை, அதே கிராமத்தை சேர்ந்த அழகர்சாமி எனும் வியாபாரி வாங்கி சந்தைகளை விற்பனை செய்து வருவதை வாடிக்கையாக வைத்து வந்துள்ளார். ஆனால் தயிர் மற்றும் மோர் பொருட்களை மரகதம் மற்றும் செல்லப்பாண்டி நாட்டரசரன் கோட்டையில் உள்ள கடை வீதிகளில் விற்பனை செய்து வந்துள்ளனர்.
இப்படியே நாட்கள் போக, ஒருமுறை தங்கவேலு தன்னுடைய விவசாய நிலத்தில் கிணறு தோன்றும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஒரு குறிப்பிட அடி வரை கிணறு தோண்ட முடிந்த அவரால் அதற்கு மேல் தோண்ட முடியவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர், வேதனையுடன் வீட்டிற்கு சென்றார்.
அப்போதே அவருக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது,
இங்க பாருப்பா தங்கவேலு ஊரை தாண்டி யாராலும் பால் பொருட்களை விற்பனை கொண்டு செல்ல முடியல அதனால் இனி நம்ப வியாபாரம் வைத்துக்கொள்ள வேண்டாம் அப்படினு சொல்லிட்டு போயிடுறாரு.
இதை நம்பி தான் நம்ப வாழ்க்கையே இருக்கு., நம்பகிட்ட வியாபாரத்திற்கு பொருள் வாங்கிட்டு போறவங்களும் இப்படி சொன்னா எப்படினு..? வேதனை அடைந்தார் தங்கவேலு.
அதன் பின் கிராமத்தின் நிர்வகிஸ்தரான மலையரசனை போய் பாக்குறாரு. அப்போ மலையரசன் பேசியதாவது.
இங்க பாருப்பா தங்கவேலு, இது நம்ப ஊரு பிரச்சனை மட்டுமில்லை பக்கத்து கிராம பிரச்சனையும் தான். இரண்டு கிராமத்திற்கும் பொதுவாக உள்ள பலாமரத்தை தாண்டி எவராலும் பால் பொருட்களை கொண்டு போக முடியல. இதைப்பற்றி நான் மன்னரிடம் சொல்லியிருக்கேன் அவரு வந்து நாளைக்கு பார்ப்பதாக சொல்லிட்டாரு.
தங்கவேலு : ஐயா, அங்க ஏதாவது காத்து கருப்பு பிரச்சனையா இருக்கும். அப்படினு சொல்லுறாரு.
அதற்கு மலையரசன்,
மலையரசன் : நீ ஏனப்பா அப்படி நினைக்குறாய். இது தெய்வத்தின் சக்தியாக கூட இருக்கலாம். நம்ப அப்படி யோசிச்சு பார்க்கலாம் அப்படினு சொல்லுறாரு.
இவரின் பேச்சை கேட்ட தங்க வேலு, அந்த பலமரத்தின் முன் சென்று நின்றார். அப்போது தான் அவருக்கு சில நினைவுகள் வந்து போனது. அதாவது, இதே பலா மரத்தின் அடியில் தான் தங்கவேலுவின் மனைவி இறந்தார். அதன் பின்தான் அவரது மகளுக்கு கண் பார்வையும் பறிப்போனது.
இந்த நிகழ்வுகளுக்கும், இப்போது நடந்து கொண்டிருக்கும் அசம்பா விதங்களுக்கும் ஏதாவது சம்மதம் இருக்குமோ, அன்னைக்கு நம்ப மனைவி இறப்பதற்கு முன் நாம் கூட இருந்திருந்தால் அவளுக்கும் அந்த நிலை வந்திருக்காது. நம்ப பிள்ளைகளும் இன்று அனாதையாகி நின்று இருக்க மாட்டாங்க என்று புலம்பிய படி நடந்து சென்றார்.
தந்தையின் நிலையை கண்டும், வீட்டின் வறுமையை நிலைத்தும் மரகதம் வேதனை அடைந்தால். அதன் பின் மறுநாள் நள்ளிரவில் அந்த கொள்ளை காட்டின் நடுவே இருந்த அவளது தாயின் சமாதிக்கு, தந்தைக்கு தெரியாமல் சென்றால்.
அவளுக்கு பார்வை இல்லை என்றாலும், உணர்ச்சிகள் அதிகமாகவே இருந்தது. அப்போது தாயின் சமாதியில் இருந்து அவளை யாரோ ஒருவர் பின் தொடர்ந்து வருவதை உணர்கிறாள். மேலும் யார் என்னை பின் தொடர்வது என்று அவள் கேட்க அந்த பக்கத்தில் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.
அப்போது அந்த உருவம் அவளை நெருங்க, நெருங்க பதறி போன அந்த சிறுமி வேகமாக ஓட்டம் பிடிக்கிறாள். ஆனால் அவளுக்கு பார்வை தெரியாததால், ஒரு கட்டத்தில் நிலை தடுமாறி தங்கவேலு வெட்டிய கிணற்றின் குழியில் விழுகிறாள்.
அதன் பின் சிறிது நேரத்திலேயே, இடி மின்னலுடன் கூடிய பலத்த கனமழை பெய்ய தொடர்கிறது. இடி மின்னல் சத்ததில் அவளது குரல் யாருக்கும் கேட்கவில்லை, அதே சமயம், மழை அதிகரித்து அந்த கிணற்று குழிக்குள் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது.
பரிதவித்த அந்த சிறுமி அந்த குழியில் இருந்து ஏற முற்பட்டபோது, அந்த உருவத்தின் கை அவளுக்கு உதவி கரம் நீட்டியது.
அது ஒரு பெண்ணின் கை என்று உணர்ந்த மரகதம், அம்மா நீங்களா என்னை காப்பாற்ற வந்தது என கேட்கிறாள். அப்போது அந்த கை அவளை கீழே விட்டு காற்றில் கரைந்தது. இதனால் மீண்டும் அவள் அந்த குழிக்குள் சென்றால்.
அப்போது மரகதத்தின் இறந்து போன தாயார் ராக்கம்மாள் ஆன்மா, மகளை காப்பாற்ற முடியாமல் தவித்தது. அதன் பின் அவரது கணவரை சென்று பார்க்கிறாள். ஆனால் தங்கவேலு வீட்டில் மகள் இல்லாததை உணராமல், ராக்கம்மாள் ஆன்மாவை கண்டதும் கதவை மூடி விடுகிறார்.
மகளை காப்பாற்ற வேண்டும் என்பதை மட்டும் கருத்தில் கொண்ட ராக்கம்மாள் ஆன்மா, அந்த பலமரத்தின் முன் சென்று, அம்மா தாயே எனது மகளை எனக்கு மீண்டும் காப்பாற்றிக்கொடு என கண்ணீர் விட்டு வேண்டியது.
ஒரு பக்கம் மரகதம் விழுந்த குழிக்குள் தண்ணீர் அதிகரித்து கொண்டே அவளது கழுத்து வரை நிரம்பியது. மறுபக்கம் அவளது தந்தைக்கு மயக்கம் தெளிந்து வீட்டில் மகள் இல்லாததை உணர்கிறார்.
அப்போது பார்வை தெரியாத மரகதத்தின் கண் முன் பல காட்சிகள் வந்து போனது, அதாவது அந்த பலமரத்தின் கீழ் தான் நிற்பது போலவும், அவளது தாய் அவளை கையில் ஒரு குழந்தையுடன் இருப்பது போலவும், பின்னாடி அவளது தந்தை கால்நடைகளை ஓட்டிக்கொண்டு செல்வது போல காட்சிகள் அவளுக்கு தோன்றியது. அப்போது தங்கவேலு எப்படியோ அங்கு வந்த தனது மகளை காப்பாற்றி விடுகிறார்.
பல வருடங்களுக்கு முன்பு அந்த கிராமத்தில் ஒரு நோய் தொற்று பரவி கொண்டு இருந்தது. அந்த சமயத்தில் தங்கவேலு தனது கால்நடைகளை நாட்டரசன் கோட்டையில் விற்பனைக்காக செல்ல தயாராகினர். அப்போது
ரக்கம்மாள் : என்னங்க, எனக்கு காய்ச்சல் அதிகமாக இருக்கு, கண் பார்வையும் மங்கலாக தெரியுது. அதனால நீங்க என் கூடவே இருங்க. அப்படினு சொல்லுறாங்க. ஆனால்,
தங்கவேலு : ஊர் பெரியவர்கள் எல்லாம் சேர்ந்து நோயை விரட்ட வெளி கிராமத்தில் இருந்து வைத்தியரை கொண்டு வர ஏற்பாடு செய்துள்ளார்கள். அதனால் நான் போயிட்டு சீக்கிரம் வரேன் அப்படினு சொல்லிட்டு போறாரு.
தன் பார்வையை முழுவதுமாக இழந்த ரக்கம்மாள், இரண்டு குழந்தைகளையும் அழைத்து கொண்டு கிராமத்தை விட்டு வெளியே செல்கிறாள். அப்போது நாட்டரசன் கோட்டையை சேர்ந்த 7 சகோதரிகள் நடந்து வராங்க.
அந்த 7 சகோதரிகளும் வெவ்வேறு கிராமத்திற்கு செல்ல வேண்டியவர்கள் :
மூத்தவள் கண்ணாத்தாள்
மூத்த பெரியநாயகி பணங்குடிக்கும்,
இளைய பெரியநாயகி உருவாட்டிக்கும்,
அரியநாச்சி மரவ மங்கலத்திற்கும்,
வாள்மேல் நடந்தால் – காளையார் கோவிலுக்கும் சென்றனர்.
அப்போது ஒரு கிராமத்தில் மட்டும் இருந்து அழுகை குரல் அதிகமாக கேட்டது, இதற்கு காரணம் என்ன ஏன அந்த சகோதரிகள் கேட்க,
கண்ணாத்தாள் : என்ன தான் சண்டா சூரனை வதம் செய்தாலும் சில மனிதர்களின் எண்ணங்களை மாற்ற முடியாது. அந்த எண்ணங்கள் அவர்களிடம் பரவி தீய சக்திகளாக உருவெடுத்து அவர்களையே அழிக்க தொடங்கியுள்ளது.
இது தான் இனி நான் தங்க வேண்டிய கிராமம் நீங்க செல்லுங்கள் சகோதரிகளே இனி நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி கண்ணாத்தாள் அங்கேயே தங்குகிறார்.
அப்போது அங்கு வந்த ரங்கம்மாள்., கண்ணாத்தாளை பார்க்க அவரும் அம்மா எனக்கு பசியாக இருக்கிறது. கொஞ்சம் சாப்பாடு கொடுக்க முடியுமா என கேட்கிறார்.
அதற்கு ராக்கம்மாள் : அம்மா ஏன் நிலையை பார்த்துமா நீங்க இப்படி கேட்குறீங்க, எங்களது கிராமத்தில் விஷக்காய்சல் காற்று முழுவதும் பரவி பல பேர் மரணத்துடன் போராடி கொண்டு இருக்கிறார்கள், எனது குழந்தையை காப்பற்ற வேண்டும் என்றதால் அங்கிருந்து தப்பித்து நான் இங்கே வந்து விட்டேன். நீங்களும் அந்த கிராமத்திற்கு செல்ல வேண்டாம் என்று சொல்கிறாள்.
பின், அம்மா எனக்கு ஒரேயொரு உதவி மட்டும் பண்ணுங்க எனது கணவர் தங்கவேலு வெளி கிராமத்திற்கு மாடு விற்பனைக்காக சென்றுள்ளார்.அவரிடம் எனது குழந்தை ஒப்படைத்து விடுங்கள் என்று கூறி விட்டு கண்ணாத்தாள் காலின் அடியிலேயே ராக்கம்மாள் இறக்கிறாள்.
அப்போது கண்ணாத்தாள் நான் இந்த எல்லையை மிதித்ததும் அந்த விஷநோய் வெளியேறி விட்டது. ஆனால் நான் மிகவும் பசியாக இருக்கிறேன் எப்போது என் பசி அடங்கி, கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி அலைகிறார்களோ அப்போது தான். நான், கிராமத்திற்குள் வருவேன் எனக்கூறி விட்டு கண்ணாத்தாள் அங்கிருந்த பலா மரத்தின் அடியில் அமர்கிறாள்.
பின் தங்கவேலு இறந்து கிடந்த மனைவியை தழுவி அழுகிறான்.
அதன் பின்னர் அந்த நாட்டு மன்னர் அங்கு வந்து, மரத்தின் அடியில் தோன்றும் படி ஆணையிட அதை தோன்றிய தோட்டக்காரர் அழகர்சாமிக்கு கண் பார்வை பறிபோகிறது. அந்த மண் மேலே பட்டதும் கிராமம் முழுவதும் செந்நிற காடாக மாறியது.
அப்போது அந்த கிராம மக்கள் அங்கு தெய்வீக சக்தி இருந்ததை உணர்ந்தனர். பின் அங்கிருந்தவர்கள் மரத்தின் அடியில் இருந்த சிலையை மேலே கொண்டு வந்ததும் கிராமம் மீண்டும் பழைய நிலைக்கு மாறியது.
அப்போது கண்ணாத்தாள் நான் இந்த எல்லையை மிதித்ததும் அந்த விஷநோய் வெளியேறி விட்டது. ஆனால் நான் மிகவும் பசியாக இருக்கிறேன் எப்போது என் பசி அடங்கி, கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி அலைகிறார்களோ அப்போது தான். நான், கிராமத்திற்குள் வருவேன் எனக்கூறி விட்டு கண்ணாத்தாள் அங்கிருந்த பலா மரத்தின் அடியில் அமர்கிறாள்.
பின் தங்கவேலு இறந்து கிடந்த மனைவியை தழுவி அழுகிறான். அதன் பின்னர் அந்த நாட்டு மன்னர் அங்கு வந்து, மரத்தின் அடியில் தோன்றும் படி ஆணையிட அதை தோன்றிய தோட்டக்காரர் அழகர்சாமிக்கு கண் பார்வை பறிபோகி அவனது கண்களில் இருந்து ரத்தம் வடிந்தது. அந்த மண் மேலே பட்டதும் கிராமம் முழுவதும் செந்நிற காடாக மாறியது.
அப்போது அந்த கிராம மக்கள் அங்கு தெய்வீக சக்தி இருந்ததை உணர்ந்தனர். பின் அங்கிருந்தவர்கள் மரத்தின் அடியில் இருந்த சிலையை மேலே கொண்டு வந்ததும் கிராமம் மீண்டும் பழைய நிலைக்கு மாறியது. மரக்கதத்திற்கும் பறிபோன பார்வை மீண்டும் கிடைத்தது.
பின்னர், அம்பாளுக்கு காளியாட்டம் நடத்தி, பலி கொடுத்து கிராமத்திற்குள் அவரது சிலையை கொண்டு செல்லும்படி, ஒரு சிறுமியின் கனவில் தோன்றி கூறியுள்ளார். அம்பாளின் ஆணைக்கு இனங்க, 1500 ஆடுகள் பலி கொடுத்து, காளியாட்டம் நடத்தி அவரை கோவில் கருவறையில் அமர வைத்தனர்.