மயிலாடுதுறையில் வாலிபால் போட்டி அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் துவக்கம்..
மயிலாடுதுறையில் ஓஎன்ஜிசி சார்பில் 7-ஆம் ஆண்டு தந்தை பெரியார் நினைவு வாலிபால் போட்டியின் இரண்டாம் நாள் விழா அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பந்து வீசி போட்டியை தொடக்கி வைத்தார்.
மயிலாடுதுறையில் ஓஎன்ஜிசி சார்பில் 7-ஆம் ஆண்டு தந்தை பெரியார் நினைவு வாலிபால் போட்டி நேற்று தொடங்கியது. மூன்று நாள் போட்டியின் இரண்டாம் நாளான இன்று நடைபெற்ற போட்டியை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, பந்து வீசி அவர் இரண்டாம் நாள் போட்டியை தொடக்கி வைத்தார். இதில், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜகுமார், நிவேதாமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
லீக் சுற்றுக்களாக நடைபெறும் இந்த போட்டியில் காரைக்கால், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த ஆண்-பெண் இருபாலர் என மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டனர்.
நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் இருபால் அணியினருக்கும் தலா முறையே ரூ.30,000, 20,000, 15,000, 10,000 ஆகிய ரொக்க பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.
இப்போட்டியில் வீர வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்று ஆக்ரோஷமாக மோதி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதனை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..