RCB vs CSK போட்டியில் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக பிசிசிஐ விராட் கோலிக்கு அபராதம் விதித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 24வது போட்டி கடந்த வெள்ளிக்கிழமை இரவு அன்று, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பங்கேற்றன.
சென்னை அணிக்கு எதிராக பீல்டிங் செய்த போது சிவம் துபே 27 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை முகமது சிராஜ் பிடித்திருந்தார். அதை கோலி மிகவும் ஆக்ரோஷமாக கொண்டாடி தீர்த்தார். இதுதான் அபராதம் விதிக்கப்பட காரணம். எனவே ஐபிஎல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கூறி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Discussion about this post