வினேஷ் போகத் தகுதி நீக்கம்..!! ராகுல்காந்தி குரல்..!!
நிர்ணயித்த அளவைவிட உடல் எடை 100 கிராம் அதிகமுள்ள காரணத்தால் பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியிலிருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த செய்தி ஒலிம்பிக் பதக்கக் கனவுடன் காத்திருந்த ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பேர் அதிர்ச்சியாகியுள்ளது.
நேற்று ஒலிம்பிக் மல்யுத்தத்தில் நடைபெற்ற பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவில் அரை இறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன், வினேஷ் போகத் போட்டியிட்டனர்.. இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட வினேஷ் போகத். முதல் நிமிடத்திலேயே யூஸ்னிலிஸ் நிலை தடுமாறி விழுந்துள்ளார்..
அதனால் அவர் எந்த ஸ்கோரும் எடுக்கவில்லை. பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஒலிம்பிக் மல்யுத்த அரையிறுதியில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு வினேஷ் போகத் முன்னேறினார். அதன் மூலம், வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததுடன், ஒலிம்பில் மல்யுத்த மகளிர் பிரிவின் இறுதி போட்டிக்கு முன்னேறி முதல் இந்தியர் என்ற பெருமையை தட்டி சென்றார்..
50 கிலோ எடை பிரிவில் போட்டியிட்ட வினேஷ் போகத்துக்கு இந்திய நேரப்படி இன்று காலை 9 மணியளவில் எடை தகுதி சோதனை செய்தபோது 50 கிலோ மற்றும் 100 கிராம் எடை இருந்துள்ளது. நிர்ணயித்த 50 கிலோவைவிட 100 கிராம் எடை அதிகம் இருந்த காரணத்தால் வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால் 50 கிலோ எடை பிரிவு பெண்களுக்கான ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் அமெரிக்க வீராங்கனைக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. போட்டியின்றி அவர் தங்கப் பதக்கமும் தட்டி சென்றார்.. வெள்ளிப் பதக்கம் யாருக்கும் வழங்கப்படாத நிலையில். வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி முறைப்படி நடத்தப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் மல்யுத்த சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.., “இன்று ஒரே நாளில் உலகின் தலைசிறந்த மூன்று மல்யுத்த வீரர்களை வீழ்த்தி வினேஷுடன் சேர்ந்து ஒட்டுமொத்த நாடும் உணர்ச்சிவசப்பட்டது.
வினேஷ் மற்றும் அவரது அணியினரின் போராட்டத்தை மறுத்தவர்கள் மற்றும் அவர்களின் எண்ணம் மற்றும் திறன்களைக் கூட கேள்வி எழுப்பிய அனைவருக்கும் அவர்களின் பதில் கிடைத்துள்ளது. இந்தியாவை ரத்தக் கண்ணீர் வடிக்க வைத்த ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் இன்று அவரது வீர மகளின் முன் சரிந்தது.
இதுதான் சாம்பியன்களின் அடையாளம், அவர்கள் களத்தில் இருந்து தங்கள் பதிலைத் தருகிறார்கள். வாழ்த்துக்கள் வினேஷ். பாரிஸில் உங்கள் வெற்றியின் எதிரொலி டெல்லி வரை தெளிவாகக் கேட்கிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..