ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..! மேலும் ஒருவர் கைது..!!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில முதன்மை செயலாளர் அஸ்வத்தமான் கைது செய்யப்ட்டுள்ளார்..
கடந்த மாதம் ஜூலை 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் 15 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்பம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.. இந்த கொலை தொடர்பாக ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பென்னை பாலு உட்பட 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி கிளைச்சிறையில் அடைக்கப்ட்டனர்..
அப்போது பென்னைபாலுவை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.., அந்த விசாரணைக்கு பின் பென்னைபாலு, அருள்., ராமு, ஹரிதரன், சிவசக்தி ஆகியோரை மீண்டும் நீதிமன்ற காவலில் எடுத்த விசாரிக்க எழும்பூர் நீதிமன்றத்தில் செம்பியம் காவல் ஆய்வாளர் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்..
அந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி பொன்னை பாலு உட்பட 5 பேரை நீதிமன்ற காவலில் எடுத்த விசாரணை செய்ய உத்தரவிட்டிருந்தார்.. அப்போது போலீஸ் விசாரணையில் குற்றவாளி அருள் கொடுத்த தகவலின் படி.., காங்கிரஸ் கட்சியின் இளைஞர் மாநில முதன்மை செயலாளர் அஸ்வத்தமானை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. இதுவரை பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 21பேர் கைது செய்யப்ட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..