விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன்..! புதிய அப்டேட்.! டீசர் மற்றம் ரிலீஸ் தேதி வெளியீடு..!
முன்னனி இசையமைப்பாளர் மற்றும் பாடகராக இருந்த விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் ஆர்வம் செலுத்தி வருகிறார். ஒரு சில திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.
இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமாகி ஆத்திசூடி, டைலாமோ, நாக்கு முக்க பாடல்கள் மூலம் திரையுலகில் பிரபலமானவர். இவர் 2012-ஆம் ஆண்டில் நான் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார்.
இவர் தேர்ந்தேடுக்கும் திரைக்கதை முற்றிலும் மாறுபட்ட கதையம்சங்களை கொண்டிருப்பதால் இவர் படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.இவர் தொடர்ச்சியாக ஐந்து படங்களில் நடித்து வருகிறார். இதில் ஒரு படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீசர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளன.
விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், சரத்குமார் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் மழை பிடிக்காத மனிதன். சத்யராஜ் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்ப பணிகள் முடிவடைந்து ஒரு வருடத்தை கடந்துள்ள நிலையில் தற்போது படத்தை வெளியிடுவதற்கு படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
ரிலீஸ் மற்றும் டீசர் வெளியாகும் தேதி :
அதன்படி படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீசர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளன. தமிழ் தெலுங்கு அகிய மொழிகளில் உருவான இப்படத்தின் டீசர் வரும் 29ம் தேதி வெளியாகும் எனவும் டீசரில் படம் ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த படத்தில் நடிகர் விஜயகாந்தை ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க வைக்க முயற்சி செய்யப்பட்டதாகவும் ஆனால் அவர் உடல் நலமின்றி இருந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது. பின்னர் ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்த் கேரக்டரை உருவாக்க திட்டமிட்டதாக கூறப்பட்ட நிலையில் அதன் பின்னர் அந்த முயற்சியும் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-பவானி கார்த்திக்.