5 மொழிகளில் ரீமேக் ஆகும் ஹரிஸ் கல்யாண் திரைப்படம்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
தனியார் தொலைக்காட்சியில் ஔிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தார். இவர் இந்து சமவெளி, அரிது அரிது,பொறியாளன் போன்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
தற்போது லப்பர் பந்து, டீசல், நூறு கோடி வானவில் ஆகிய மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த மன்று திரைப்படங்களும் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வெளியாகும் என்று கூறுகின்றனர்.
ஹரிஷ் கல்யாண், இந்துஜா ரவிச்சந்திரன், எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் “பார்க்கிங்”. இந்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இந்த படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி இருந்தார்.
மேலும் இந்த படம் 17 கோடி ரூபாய் வசூல் செய்து தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுத்தது.
“பார்கிங்” திரைப்படம் திரையரங்குகளில் மட்டும் இல்லாமல் ஓடிடியிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை பார்த்த பல வெளி மாநில தயாரிப்பாளர்கள் ரீமேக் செய்ய முன் வந்ததாகவும், ரீமேக் உரிமை நல்ல தொகைக்கு விற்பனை ஆகி உள்ளதாகவும் தெரிகிறது.
ஜந்து மொழிகளில் வெளியாகும் பார்கிங் திரைப்படம் :
பார்க்கிங் திரைப்படம் வெளியான போது படத்தை பார்த்த ரசிகர்கள் பல்வேறு விதமான பாசிடிவ் விமர்சனங்களை கூறி வந்தனர். அதில் கார் பார்க்கிங்காள் ஒரு வீட்டில் பிரச்சனையை அழகாக கூறியுள்ளனர் என்றும் வெளிநாட்டு கதை போல் இருக்கிறது என்று சிலர் விமர்சனம் செய்திருந்தனர்.
தற்போது ஒரு வெளிநாட்டு மொழி மற்றும் நான்கு இந்திய மொழிகள் என மொத்தம் ஐந்து மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்ய ஒப்பந்தமாகி இருப்பதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
– பவானி கார்த்திக்
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..