ராயல் திரைப்படம்.. முதல் நாள் விமர்சனம்.. ரசிகர் கூறுவது என்ன..?
தமிழ் சினிமாவின் தவிர்கக முடியாத ஹீரோவாக வலம் வரும் நடிகர் தனுஷ் எழுத்தி, இயக்கி நடித்திருந்த திரைப்படம் ராயன். சன் நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், அபர்ணா பாலமுரளி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
தனுஷின் 50வது படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்புக்கு பிறகு பிரமாண்டமாக இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது.
ராயன் கதை சுருக்கம்:
சின்ன வயசிலேயே பெற்றோரை இழந்துவிடும் தனுஷ், தன் தம்பிகளான சந்தீப் கிஷான், காளிதாஸ் மற்றும் தங்கை துஷாரா ஆகியோரை வளர்த்து வருகிறார். வட சென்னையில் வாழும் தனுஷின் குடும்பத்திற்கு எதிரிகளால் பிரச்சனை ஏற்பட்டு அவரின் அழகான குடும்பம் சின்னாபின்னமாகிவிடுகிறது. தன் குடும்பத்தை அழித்த எதிரிகளை தேடிப்பிடித்து அசுரனாய் மாறி வதம் செய்யும் படம் தான் இந்த ராயன்.
வசூல்:
ப்ரீ புக்கிங் வசூலிலையே கெத்து காட்ட காட்டிய ராயன் தற்போது இந்த ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களின் வசூலை முறியடிக்குமா என்று பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
கொண்டாடும் ரசிகர்கள்:
ராயன் திரைப்படம் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளி ஆகி உள்ளது. தனுஷின் 50வது படம் என்பதால் அவரின் ரசிகர்கள் திரையரங்கில் திருவிழா போல் பேனர் வைத்தும், அதற்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்து ஆடிப்பாடியும் கொண்டாடி வருகின்றனர். அசுரனுக்கு பிறகு தற்போது மீண்டும தனுஷின் இந்த மாஸ் லுக்கிற்காகவே அவரின் ரசிகர்கள் தியேட்டருக்கு படை எடுத்து வருகின்றனர்.
ராயன் படம் ரசிகர்கள் கருத்து :
வெறித்தனமாகவும் இரண்டாம் பாதி வெறித்தனத்தின் உச்சம் என்றே சொல்லலாம். தனுஷின் எண்ட்ரி மெர்சலாக உள்ளது. இண்டர்வெல், கிளைமாக்ஸ் காட்சிகள் அனல்பறக்கின்றன.
மேலும் வெற்றி மாறனின் திரைப்படங்களை போலவே ராயன் படத்தை தரமாக தனுஷ் இயக்கி உள்ளதாக சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்