தாயை கடித்த நாய்… தேடி சென்று மகன் செய்த சம்பவம்..!
தேனி மாவட்டம், கூடலூரை சேர்ந்தவர் கிரண் (26). இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு செறியில் இருந்த இவர் நிபந்தனை ஜாமீனில் வெளீயே வந்துள்ளார்.
இந்தநிலையில், தற்போது தேங்காய் வெட்டும் தொழில் செய்து வருகிறார். நேற்று வழக்கம் போல் வேலைக்காக தனது இரு சக்கர வாகனத்தில் மூலம் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் சுற்றி திரிந்த ஒரு நாயை பிடித்து தரையில் அடித்து பலமாக தாக்கியுள்ளார். இதனால் நாய் உயிரிழந்துள்ளது.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து அந்த வாலிபரிடம் சண்டை போட்டுள்ளனர். அதற்கு அவர் அப்பகுதி மக்களை கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனால் அப்பகுதி மக்கள் இதுகுறித்து கூடலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரின் வழக்கு பதிவு செய்த போலீசார் கிரணை தட்டி தூக்கினரர். மேலும் அவரை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், கிரண் சிறைச்சாலையில் இருந்தபோது அவரது தாயை தெருநாய் கடித்ததாகவும், தற்போது அதற்காக பழி வாங்குவதற்காக அதே தெருநாயை தேடி கண்டுபிடித்து அடித்துக் கொன்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
தாயை கடித்த நாயை இறக்கமே இல்லாமல் நடு ரோட்டில் மகன் அடித்துக்கொன்ற சம்பவம் கூடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்