மணமணக்கும் கறிவேப்பிலை இட்லி பொடி..!
கறிவேப்பிலை – 1 கப்
கடலைப்பருப்பு – 3 மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 3 மேசைக்கரண்டி
தனியா – 2 மேசைக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 8
புளி
கல் உப்பு – 1 தேக்கரண்டி
பெருங்காய தூள் – 1/4 தேக்கரண்டி
மினி இட்லி
நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி
கறிவேப்பிலை பொடி – 1 மேசைக்கரண்டி
நெய் – 1 தேக்கரண்டி
ஒரு வாணலில் கடலை பருப்பு,உளுத்தம் பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.
பருப்பு வறுபட்டதும் தனியா,சீரகம்,காய்ந்த மிளகாய்,புளி,பூண்டு,உப்பு,கறிவேப்பிலை சேர்த்து வறுத்து பின் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து வறுத்து பின் ஆறவிடவும்.
பின் அதனை ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
இப்போ இட்லி பொடி தயார். ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அதில் மினி இட்லி சேர்த்து அதில் கறிவேப்பிலை பொடி தூவி கடைசியில் நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.