வெட்டிவேரும் அதன் மருத்துவகுணமும்..!!
உடல் சூடானது இன்று பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை அதிலும், இது கோடைகாலம் என்பதால் உடல் சூடு இன்னும் அதிகமாக இருக்கும். வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த சமயத்தில் உடல் சூட்டை தணிப்பதற்காக பழவகை ஜூஸ் களை எடுத்துக்கொள்கிறோம். அதனுடன் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
புல்லுக்கு வேருக்கும் இடைப்பட்ட பகுதிதான் வெட்டி வேர். வெட்டி வேரை எடுத்துக்கொண்டு நன்றாக பொடி செய்து தூளாக எடுத்துக்கொள்ளவும்.
* வெட்டிவேருடன் சிறிதளவு பெருஞ்சீரக தூளை சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால், நீர்க்கடுப்பு, உடல் எரிச்சல் மற்றும் வயிற்றுகடுப்பு போன்ற நோய்கள் குணமாகி விடும்.
* இந்த கசாயத்தை தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மலம் சம்மந்தமான பிரச்சனை குணமாகிவிடும்.
* உடல்வலி நீங்க தேங்காய் எண்ணையுடன் வெட்டிவேரை சேர்த்து நன்றாக சூடாக்கி, காயவைத்து வலி உள்ள இடங்களில் தடவி வந்தால். உடல் வலி ஒரே நொடியில் சரியாகி விடும்.
* சில நாட்டு மருந்துக்கடைகளில் வெட்டிவேர் டானிக் விற்கப்படும். அதை தினமும் காலை மற்றும் இரவு ஒரு ஸ்பூன் குடித்து வந்தால், செரிமான பிரச்சனை மற்றும் சுவாசக்கோளாறு, நரம்பு தளர்ச்சி குணமாகிவிடும்.
* மனஅழுத்தம் உள்ளவர்கள் வெட்டிவேர் ஃபேர்ப்யும் பயன் படுத்தினால், மனநோய் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.
* நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை வெட்டி வேருக்கு எப்பொழுதும் உண்டு. எனவே நோய் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்கள். கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
* வெட்டிவேரை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, வடிகட்டி குடித்து வந்தால், உடல் சோர்வு மற்றும் உடல்வலி உடனே நீங்கிவிடும்.
* ஜீரண சக்தியை அதிகரிக்கும் தன்மையும், சாப்பிட்ட உணவு ஜீரணமாக்கும் தன்மையும் வெட்டிவேருக்கு உண்டு. எனவே வயதானவர்கள் எடுத்துக்கொள்வது சிறந்தது.
* வயிற்று புண்களை குணமாக்கும் தன்மை, வெட்டிவேருக்கு உண்டு எனவே. அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
* வெட்டிவேரில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும். எனவே குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
Discussion about this post