கர்ப்பிணி பெண் கொலை வழக்கு…விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (40) இவருக்கு தேவி (34),என்ற மனைவியும் 6 வயதில் மகனும் உள்ளது.
முருகன் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். தேவி திருமங்கலம் பகுதியில் பாலாஜி என்பவரின் வீட்டில் பூ எம்பிராய்டிங் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை வேலைக்குச் சென்ற தேவி இரவாகியும் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்காததால் அச்சம் அடைந்த முருகன் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த சமயத்தில் திருமங்கலம் பள்ளத் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை அப்பகுதி மக்கள் சரி செய்தபோது கால்வாயில் ஒரு இளம்பெண் நிர்வான நிலையில் கால்கள் கட்டபட்டு இறந்து கிடப்பது தெரிய வந்தது. உடனே அப்பகுதி மக்கள் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கழிவுநீர் கால்வாய் மீது அமைக்கபட்டிருந்த சிமென்ட் கான்கிரீட் ஸ்லாப் மூடியை உடைத்து சடலத்தை மீட்டனர்.
பின்னர் முருகனுக்கும் தகவல் கொடுக்கபட்டு அவர் அங்கு வரவழைக்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு வந்த முருகன், இறந்தது தனது மனைவி தேவி என்பதை உறுதி செய்தார். மேலும் தேவியில் உடலில் காயங்கள் இருந்ததால் இதனால் தேவி அடித்துக் கொலை செய்யபட்டு, கால்வாயில் சடலம் வீசப்பட்டது தெரியவந்தது.
பின்னர் போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரவி (26) என்ற இளையரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் ரவி தான் தேவியை கொலை செய்தார் என்பது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.
அதில் தேவியும், ரவியும் உறவினர்கள் ஆவர். எனவே இருவரும் எதிரெதிரே வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் ரவியும், தேவியும் கடந்த ஒரு வருடமாக தகாத உறவில் இருந்து வந்துள்ளனர். இதனால் தேவி கர்ப்பமாகி உள்ளார்.
இந்நிலையில் 3 மாத கர்ப்பிணியாக இருந்த தேவியின் கருவை கலைத்துவிடுமாறு ரவி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் தேவி அதற்கு மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று தேவி வேலை முடிந்து வீட்டிற்கு பள்ளித்தெரு வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ரவி, தேவியை வழிமறித்து ”ஓரிரு நாளில் நீ கர்ப்பத்தை கலைக்க வேண்டும், இல்லை என்றால் என்ன நடக்கும் என்று எனக்கே தெரியாது” என்று மிரட்டி உள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ரவி, தேவியின் தலையை பிடித்து அங்கிருந்த சுவரில் தள்ளி முட்டியுள்ளார்.
இதில் தேவி மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். அதன்பின்னர் தேவியின் கழுத்தில் இருந்த தாலியை அறுத்து ரவி தனது பையில் வைத்துக்கொண்ட்டார்.
மேலும் புடவையை கழற்றி கால்களை புடவையால் கட்டி, தேவியின் சடலத்தை ரவி கால்வாயில் வீசிச் சென்றது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய தெரியவநதுள்ளது.
கள்ளக்காதல் விவகாரத்தில் கர்ப்பிணியை வாலிபர் அடித்துக் கொன்ற இந்த சம்பவம் சுங்குவார்சத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-பவானி கார்த்திக்