மஞ்சள் பூசணி ரெசிபி..! சுவையான மார்னிங் டிபன்..! இப்படி செய்து பாருங்க..!!
தினமும் இட்லி, தோசை , பொங்கல் என சாப்பிட்டு சாப்பிட்டு.. சலிச்சு போச்சா.. இனி கவலையே வேண்டாம். அருமையான சுவையும் ஆரோக்கியம் தர கூடிய ஒரு மார்னிங் பிரேக் பாஸ்ட் தாயர். இனி மார்னிங் பிரேக் பாஸ்ட் இப்படி செய்து பாருங்க..
தேவையான பொருள்கள் :
மஞ்சள் பூசணி – 1/4 கிலோ ( நன்கு துருவி கொள்ள வேண்டும் )
கோதுமை மாவு – 1/2 கப்,
வெல்லம் – 1/2 கப்,
ஏலக்காய் – 3,
உப்பு – தே.அளவு.
செய்முறை :
மஞ்சள் பூசணி மற்றும் வெல்லத்தை துருவி எடுத்துக்கொள்ள வேண்டும்.. வெல்லத்துடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். வெல்லம் கொதித்த பின் வேறு பாத்திரத்தில் மாற்றி அதில் துருவிய பூசணியை போட்டு வேக வைக்க வேண்டும்.
பூசணி நன்கு வெந்த பின் கோதுமை மாவு, ஏலக்காய், உப்பு சேர்த்து ஆகியவற்றை சேர்த்து பூரிமாவு பதத்திற்கு நன்கு பிசைந்துக் கொள்ள வேண்டும். பின் அதன் மேல் ஒரு ஈர துணி வைத்து கால் மணி நேரம் மூடி வைக்க வேண்டும்.
இதனால் மாவு நன்றாக ஊறிவிடும். பின் மாவை பூரியை போல் திரட்டி கொண்டு எண்ணையில் போட்டு எடுத்துக்கொள்ளவும். சுவையான மஞ்சள் பூசணி ரெடி..
மஞ்சள் பூசணி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒன்று.., பெரியவர்கள் முதல் சிரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..