சருமம் என்றும் அழகாக இருக்க இதை ட்ரை பண்ணுங்க.!!
முகப்பரு , முக சுருக்கம், அலர்ஜி போன்ற பிரச்னைகளால் அவதி படுபவரா நீங்கள்..? பல கிரீம்கள் உபயோகித்தும் பலன் இல்லையா..? இனி கவலையே வேண்டாம். சருமம் பளபளப்பாகவும், என்றும் ஆரோக்கியமாகவும் சருமம் சுருக்கமின்றி , இருக்க இதை ட்ரை பண்ணுங்க.
மூலிகை தேனீர் :
காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இந்த மூலிகை தேநீரை அருந்த வேண்டும். இந்த மூலிகை தேநீரானது சாமந்தி, ரோஜா மற்றும் செம்பருத்தி ஆகிய மலர்களை கொண்டு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து தேனீராக குடிக்கலாம்.
இது நம் சருமத்தில் நீரேற்றத்தை அதிகரிக்கும். இந்த ஜூஸ் கோடை காலத்தில் எடுத்துகொண்டால் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
இளநீர்:
பொதுவாகவே இளநீரானது நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். தினமும் காலை இளநீர் குடிப்பதனால் இளநீரில் எலெக்ட்ரோலைட்கள் , விட்டமின்கள் மற்றும் பொட்டாசியம் அதிகரிக்கும். இதனால் சருமம் என்றும் ஈரப்பதத்துடன் இருக்கும்.
அதுமட்டு,மின்றி இளநீர் குடிப்பதால் தோல் அல்ர்ஜி, தோல் எரிச்சல் போன்ற தொல்லைகள் நீங்கும்.
வெள்ளரிக்காய்:
இந்த வெள்ளரிகாயுடன் சிறிது புதினா இலைகளை சேர்த்து நீரில் நன்கு கொதிக்க வைத்து குடிப்பதால் உடல் புத்துணர்சியுடன் இருக்கும். இதில் தோல் வறட்சி தன்மையை போக்கும், தோலில் ‘சிலிக்கா’ என்ற கனிமத்தை கொண்டுள்ளது.
இதனை கோடை காலங்களில் சாப்பிட்டால் உடலின் வெப்பம் தணித்து, உடலை என்றும் குளிர்ச்சியாக வைத்திருக்கும். உடலை மட்டுமின்றி சருமத்தையும் அழகாக வைத்திருக்கும்.
கேரட் ஜூஸ்:
பொதுவாகவே நம் சருமத்தை அழகாகவும் வசீகரமாகவும் வைத்து கொள்ள கேரட் ஜூஸ் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த கேரட் ஜூஸ் குடிப்பதால், அதில் இருக்கும் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் A போன்ற சத்துக்கள் நம் உடலுக்கு கிடைக்கும் அதுமட்டுமின்றி ஆக்சிஜெனேற்றம் கொடுக்கும்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
Discussion about this post