இதனால் தான் தலைமுடி கொட்டுது…! தவிர்க்க வேண்டியவை…!
ஷாம்புவில் அதிக அளவில் ரசாயனங்கள் கலந்திருக்கிறது. இதனை தலைமுடியில் போடவே கூடாது. முடிந்த அளவிற்கு இயற்கையான முறையில் சீயக்காய் பயன்படுத்தி தலைமுடியை அலசும் பழக்கத்தை கொண்டிருக்க வேண்டும்.
நீச்சல் குளத்தில் குளோரின் கலந்திருக்கும், இந்த நீரில் குளிக்கும்போது அது முடியினை பாதிக்கும்.
ஈரத்தலையில் உறங்க கூடாது. முடி ஈரமாக இருக்கும் போது சீக்கிரம் உடைந்து விடும். காய்ந்த தலையில் மட்டுமே தூங்க வேண்டும்.
சூடான நீரில் தலைக்கு குளித்தல் கூடாது, அது முடியின் வேர்க்கால்களை பாதிக்கும். மாற்றாக மிதமான நீரில் குளித்தல் நன்மை தரும்.
தலையில் இருக்கும் நரையை தேடி நறுக்குதல் கூடாது. அடி முடி வெடித்திருந்தால் மட்டும் வெட்டி விடுவது முடி வளர்ச்சியை தூண்டும்.
முடியை இறுக்கமாக பின்னுதல் கூடாது, இது தலைமுடியை உதிர வைக்கும். லூஸ் ஹேராகவும் விடுவது தலைமுடிக்கு பாதிப்பை ஏற்ப்படுத்தும்.
தலைமுடிக்கு பயன்படுத்தும் சீப்பு, ஃபிரஷ் போன்றவற்றை அடிக்கடி சுத்தம் செய்தல் வேண்டும். அப்படி செய்யாவிடில் தலையில் உள்ள பொடுகு போன்றவை தலைமுடியை பாதிக்கும்.
கண்டிஷனர் தலைமுடியை மென்மையாகவும் பளப்பளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. ஆனால் இதையே தலையில் நீண்ட நேரம் வைத்திருப்பது தலைமுடிக்கு நல்லதல்ல.
சத்துக்கள் இல்லாத உணவுகள் முடியின் வளர்ச்சிக்கு உதவாது. வைட்டமின் ஏ,சி,டி, ஜிங்க் ஆகிய சத்துக்கள் கொண்ட உணவுகளை உண்பது முடியின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
வெயிலில் போகும்போது சூரிய புறஊதால்கதிரில் இருந்து தலைமுடியை பாதுகாக்க தொப்பி அணிதல் வேண்டும்.
அதிக அளவிலான கவலை, மன அழுத்தம் போன்றவை முடி உதிர்வை உண்டாக்கும். குறைந்த அளவில் உறங்குவது ஒருவருக்கு தலைமுடி பிரச்சனைகளை ஏற்ப்படுத்தும்.
தலைமுடியில் கெமிக்கல் டை பயன்படுத்துதல் கூடாது. வாரத்திற்கு இரு முறை தலைக்கு குளித்தல் வேண்டும், பேன் பொடுகு ஆகியவற்றை சுத்தம் செய்தல் வேண்டும்.
தலைக்கு பயன்படுத்தும் சீப்பு தரமானதாக இருத்தல் வேண்டும். விலைகுறைவான குச்சி போன்ற சீப்புகள் முடியை துண்டிக்கும்.