இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த சுற்றுப்பயணமாக இலங்கையை எதிர்கொள்ளஉள்ளது. அதற்கான ஓடிஐ மற்றும் டி20 அணிகளை அறிவித்துள்ளது.
இந்திய அணி தற்போது வங்கதேசம் எதிரான சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு அடுத்ததாக இலங்கை எதிரான 3 ஓடிஐ மற்றும் மூன்று டி20 போட்டிகளை கொண்ட சுற்றுப்பயணத்தில் விளையாட உள்ளது. இதற்கான அணியை தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும், இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் ஜனவரி 3 முதல் 7 வரை நடைபெறுகிறது மற்றும் ஒரு நாள் தொடர் ஜனவரி 10 முதல் 15 வரை நடைபெறுகிறது.
#TeamIndia squad for three-match T20I series against Sri Lanka.#INDvSL @mastercardindia pic.twitter.com/iXNqsMkL0Q
— BCCI (@BCCI) December 27, 2022
டி20 உலக கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் பல புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்தியா ஆல் ரவுண்டர் ஹர்டிக் பாண்டிய அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் மேலும்,இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்த கே.எல். ராகுல் நீக்கப்பட்டுள்ளர். டி20 போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வந்த ரிஷாப் பண்ட் நீக்கப்பட்டுள்ளார் மேலும், விராட் கோலிக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஷிவம் மாவி, முகேஷ் குமார், ராகுல் திரிபாதி மற்றும் ஷுப்மன் கில் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொடருக்கு எதிரான இந்திய டி20 அணி ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யஸ்வேந்திரா சஹால், அக்ஷர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி, முகேஷ் குமார்.
#TeamIndia squad for three-match ODI series against Sri Lanka.#INDvSL @mastercardindia pic.twitter.com/XlilZYQWX2
— BCCI (@BCCI) December 27, 2022
இதனை தொடர்ந்து 50 ஓவர் உலக கோப்பை இந்தியாவில் வரும் ஆண்டு நடக்கவுள்ளதால் அதற்கான தகுந்த அணியை அமைப்பதில் பிசிசிஐ கவனம் செலுத்தி வருகிறது. இலங்கைக்கு எதிரான 50 ஓவர் தொடரில், நட்சத்திர வீரர்களான தவான்,ஜடேஜா,ரிஷாப் பண்ட் மற்றும் பும்ரா இடம்பெறவில்லை. இலங்கைக்கு எதிரான இந்தியா ஒரு நாள் அணி: ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யஸ்வேந்திரா சஹால், குல்தீப் யாதவ், அக்ஷர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் என இரண்டு அணிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.