இந்தியாவிலுள்ள அசாம் மாநிலத்தில் செவ்வாய் கிழமை பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததில் பல ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் பள்ளிகள் சேதமடைந்துள்ளது. இது குறித்த தகவலை அந்த மணிலா பேரிடர் மேலாண்மை அறிக்கை வாயிலாக அறிவித்துள்ளது.
மிகவும் அறிய நிகழ்வுகளுல் ஒன்றான ஆலங்காட்டி மழை அசாமிலுள்ள 132 கிராமங்களில் பெய்துள்ளது. திடீரென பெய்த இந்த ஆலங்கட்டி மழையால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது. குறிப்பாக திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய் அதிகாலை வரை மோரன், திங்காங், லாஹோவல், லெகாய், நகர்கடியா உள்ளிட்ட பகுதியில் பெய்த மழையில் பெரிய பனிக்கட்டிகள் விழுந்ததால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆலங்கட்டி மழையால் சுமார், 4,500 வீடுகள் சேதமடைந்ததாகவும், 2 பள்ளி கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன என்று தெரிவித்துள்ளது. மேலும் இதனால் 18,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அசாம் மாநில முதலவர் ஹிமன்த் பிஸ்வா கூறுகையில், ஆலங்கட்டி மாலையால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து விரிவான அறிக்கை தயாரிக்க அதற்கான அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.