இந்தியாவை வீழ்த்திய டாம் லேதம்-கேன் வில்லியம்சன் ..!! தொடரில் முன்னிலை பெற்ற நியூஸிலாந்து..!!
இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூஸிலாந்து அணிக்கு எதிராக இருதரப்பு தொடரில் விளையாடி வருகிறது. ஹர்டிக் பாண்டிய தலைமையில் டி 20 தொடரை 1-0 என்ற கணக்கில் வென்று தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை ஷிகர் தவான் தலைமையில் தொடங்கியுள்ளது.
இன்று தொடங்கிய போட்டியில் நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால் முதலில் பேட்டிங் இறங்கிய இந்தியா அணி நல்ல தொடக்கத்தை பெற்றது 100 ரன்களுக்கு ஒரு விக்கெட் கூட இழக்காமல் பார்ட்னெர்ஷிப் அமைத்தது. 24 வது வரை வீசிய லோகி பெர்குசன் 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்தியா அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் விக்கெட்டை வீழ்த்தினார். பின்னர் அடுத்த ஒவேரில் இந்தியா அணியின் கேப்டன் ஷிகர் தவான் 72 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தன் விக்கெட்டை இழந்தார். இதைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயஸ் ஐயர் 80 ரன்களில் சவுதி பந்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரின் 36(16)அதிரடியால் 50 ஓவர்கள் முடிவில் 300 ரன்களை கடந்தது. இறுதியில் 306 ரன்களை சேர்த்து தனது முதல் இன்னிங்க்ஸை முடித்தது இந்தியா அணி.
307 என்ற இமாலய இலக்கை துரத்த களம் இறங்கிய நியூஸிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். ஜம்மு காஷ்மீரை சேர்ந்த வேகா பந்து வீச்சாளரான உம்ரன் மாலிக்கின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. 20 ஓவர்களில் 88 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்த நிலையில் நியூஸிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதேம் இணைந்து நிதானமாக இலக்கை துரத்தினர்.
அரை சத்தம் அடித்த பிறகு டாம் லேதம் அதிரடியாக ஆட தொடங்கினார். வேனும் 76 பந்துகளில் சதம் அடித்து இந்தியன் பௌலர்களை பதம் பார்த்தார். மறுமுனையில் நிதானமாக ஆட்டத்திற்கு பேர் பண காணே வில்லியம்சன் அரைசதம் கடந்து விளையாடினர். இதனால் விக்கெட்டை எடுக்காமல் இந்தியா தடம்புரள ஆரம்பித்தது. இறுதியில் 47 ஓவர்களில் இலக்கை அடைந்தது நியூஸிலாந்து அணி. டாம் லேதம் 145 ரன்களும் கேன் வில்லியம்சன் 94 ரங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் முன்னிலை பெற்றது நியூஸிலாந்து.