நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் பாலா இருவரும் இணைந்து வணங்கான் என்ற படத்தில் மீண்டும் இணைய இருப்பதாக போஸ்டர் வெளியிட்டனர் அதன்பிறகு படத்தை குறித்தான ஒரு தகவலும் வெளியாகாத நிலையில் அந்த படத்தை மீண்டும் துவங்க சூர்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கியமான படங்களான பிதாமகன், நந்தா போன்ற படங்களை இயக்கியது இயக்குனர் பாலா. சூர்யாவின் நடிப்பை மேலும் மெருகேற்றியது பாலா தான் பல வருடங்கள் கழித்து இயக்குனர் பாலா மற்றும் சூர்யா இருவரும் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. அந்த படத்திற்கு வணங்கான் என்றும் பெயரிடப்பட்டது.
இதனால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாகியது. பின்னர் இயக்குனர் பாலா மற்றும் சூர்யாவிற்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அந்த படம் கைவிடப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் பரவியது. மேலும் படத்தை குறித்தான எந்த ஒரு தகவலும் வெளியாகாமாலும் இருந்தது. இந்நிலையில் சூர்யா சிவா வின் இயக்கத்தில் நடிக்க சென்றுவிட்டதால் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது மீண்டும் துவங்கும் என்று ரசிகர்களிடம் கேள்வி எழும்பியது. சூர்யா சிவாவின் படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு குறித்தான அப்டேட் வெளியாகியுள்ளது. சூர்யா 42 ன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்கு பிறகு மூன்றாம் கட்ட படப்பிடிப்பு துவங்க தாமதம் ஆகும் என்பதால் இந்த இடைவெளியில் வணங்கான் படத்தை ஒரே கட்டமாக முடித்துவிட சூர்யா முடிவெடுத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.