இன்றைய ராசி பலன்..!! இந்த ராசிக்கு மட்டும் பணம் வரவு..!!
மேஷம் ராசி நண்பர்களே நீங்கள் நினைத்த காரியங்கள் கை கூடும்.., வியாபாரத்திலும் வேலையிலும் நீங்கள் கையாள நினைக்கும் புதுயுக்தி உங்களுக்கு கை கொடுக்கும்.
இன்று பெரும் அளவில் செலவுகள் இருக்காது.., உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.
ராசி வாழிபாடு : பரணி, கிருத்திகை மற்றும் அசுவினி நட்சத்திரம் கொண்டவர்கள் முருகனை வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.
எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும். ஆனால் வாழ்க்கை துணையால் செலவுகள் அதிகரிக்கும். சுற்றி இருப்பவர்களுடன் வீண் விவாதம் செய்வதை தவிர்த்து கொள்ளலாம். வியாபாரத்தில் லாபல் அதிகரித்தாலும்.., தொழிலாளர்களிடயே வாய் தகராறு ஏற்படும். இன்று நீங்கள் மௌனம் கடைபிடிப்பது நல்லது.
ராசி வழிபாடு : கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிடம், சிவபெருமானை வழிபட்டால் சஞ்சலங்கள் நீங்கும்.
புதிய செயல்களில் ஈடுபட்டு இன்னல்களில் சிக்கி கொள்ள வேண்டாம். சுற்றி இருப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். உடல்நலம் மற்றும் மன நலத்தில் கவனம் தேவை. இன்றைய நாளில் உங்களுக்கு பொறுமை மிகவும் அவசியம்.
ராசி வழிபாடு : மிருகசீரிடம், புனர்பூசம், திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மஹாவிஷ்ணுவை வழிபாடு செய்யலாம்.
தந்தை வழி உறவுகளால் சங்கடங்கள் ஏற்படும். வாழ்க்கை துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத பண வரவு, பொருள் வரவு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.
ராசி வழிபாடு : புனர்பூசம், பூசம், ஆயில்யம் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது சிறந்தது.
இன்று உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டகரமான நாள். நீங்கள் எடுக்கும் புது முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும், குழந்தைகள் குறைகளை தீர்த்து வைக்க கூடும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.
ராசி வழிபாடு : மகம், பூரம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அம்பிகை அம்மனை வழிபட்டால் இன்னும் சிறந்த பலன்கள் கிடைக்கும்.
செலவீனங்கள் அதிகரிக்கும், எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.., உங்களுக்கு எதிராக பல நிகழ்வுகள் நடக்கலாம். உறவினர்களிடம் கவனம் தேவை, வீண் விவாதத்தை தவிர்க்கவும். வியாபாரத்தில் சற்று சிக்கல் ஏற்படலாம்.
ராசி வழிபாடு : உத்திரம் நட்சத்திரம், அஸ்தம் நட்சத்திரம், சித்திரை நட்சத்திரம் உடையவர்கள் துர்கை அம்மனை வழிபட்டால் சிக்கல்களை தவிர்க்க நேரிடும்.
மிகவும் உற்சாகமான நாள், கணவன் மனைவியிடையே இருந்த சிக்கல்கள் தீர்ந்து உறவுகளிடையே நெருக்கங்கள் அதிகரிக்கும். வாழ்க்கைதுணையின் உறவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனை கிடைக்கும். குழந்தைகளிடம் பிடிவாதம் பிடிக்க வேண்டாம்.
ராசி வழிபாடு : சித்திரை நட்சத்திரம், சுவாதி நட்சத்திரம், மற்றும் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விநாயகரை வழிபட்டால் சிறந்த பலன்கள் கிடைக்கும்.
பணம் வரவு கிடைத்தாலும் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்களின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். குடும்பத்தில் உற்சாகம் அதிகரிக்கும். உறவுகளிடம் ஏற்பட்ட சிக்கல்கள் தீர்ந்து விடும். பணியில் பாராட்டுக்கள் கிடைக்கும்.
ராசி வழிபாடு : விசாகம் நட்சத்திரம், அனுஷம் நட்சத்திரம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பைரவரை வழிபட்டால் நாள் சிறப்பாகும்.
புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள், சகோதரவகையில் எதிர்பாராத காரியங்கள் முடிவதில் தாமதம் ஆகும், காரியங்கள் அனுகூலமாக முடியும். வாழ்க்கை துணையால் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
ராசி வழிபாடு : மூலம் நட்சத்திரம், பூராடம் நட்சத்திரம், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகாலட்சுமியை வழிபட்டால் சிறந்தது.
மாலை நேரங்களில் புதிய முயற்சிகளை ஈடுபட்டால் அவை கை கொடுக்கும். உடல் ஆரோக்கியம் குணம் ஆகும். உறவினர்களிடம் பேச்சு வார்த்தையை தவிர்த்து கொள்வது சிறந்தது. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
ராசி வழிபாடு : உத்திராடம் நட்சத்திரம், திருவோணம் நட்சத்திரம் மற்றும் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகாவிஷ்ணுவை வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.
பொறுமையை கடை பிடிப்பது அவசியம், செலவுகள் மற்றும் கடன் சுமை அதிகரிக்கும், சுற்றி இருக்கும் உறவுகளிடம் விவாதம் மேற்கொள்வதை தவிர்த்து கொள்ளலாம்.. வீண் செலவுகள் அதிகரிக்க கூடும் என்பதால் தொழிலாளர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.
ராசி வழிபாடு : அவிட்டம் நட்சத்திரம், சதயம் நட்சத்திரம், பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தட்சிணாமூர்த்தி வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.
கணவன் மனைவிகிடையே இருந்த சிக்கல்கள் தீர்ந்து மீண்டும் சந்தோஷமாக மாறும். நினைத்த காரியங்கள் கை கொடுக்கும். எந்த செயல் செய்தாலும் சிந்தனையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். உறவுகளின் ஆதரவு அதிகரிக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்,.
ராசி வழிபாடு : பூரட்டாதி நட்சத்திரம், உத்திரட்டாதி நட்சத்திரம், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நரசிம்மரை வழிபட்டால் வெற்றி கிடைக்கும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..